மேலும் அறிய

"எங்க அப்பா பார்த்துப்பாரு"வேகமாக வந்து மோதிய கார்.. பறிபோன 3 உயிர்கள்

கேரளாவில் வேகமாக காரை ஓட்டிச் சென்று 3 பேரை இடித்து கொன்ற இளைஞர் இந்த விஷயத்தை என்னுடைய அப்பா பார்த்துக் கொள்வார் என திமிராக பேசியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடும்பசேரி எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் மூன்று பேரும் அருகில் உள்ள டீ கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். கொச்சி விமான நிலையத்தை நோக்கி செல்லும் சாலையில் அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது மினி கூப்பர் கார் ஒன்று அதிவேகமாக வந்து கண்னிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். அதோடு காருக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர் 100 மீட்டர் தூரம் வரையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வயநாட்டைச் சேர்ந்த 21 வயதான தேவிகா, பாலக்காட்டைச் சேர்ந்த 22 வயதான கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 21 வயதான் இஜாஸ் அக்கம்பக்கத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் 19 வயதே ஆன சுஹைல் சஜீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்த போது அந்த நபர் போதையில் இருந்துள்ளார். 3 பேரின் உயிரை பறித்துவிட்டு இந்த விஷயத்தை எனது அப்பா பார்த்துக் கொள்வார் என அந்த இளைஞர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. விபத்து நேரத்தில் அந்த கார் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுஹைலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சுஹைலை மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்த நபர்களின் நண்பர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். விபத்து தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27: சமூகப் பணியாளர்களுக்கு அரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க அழைப்பு !
டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27: சமூகப் பணியாளர்களுக்கு அரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க அழைப்பு !
இனி இப்படி நடக்காது.. மன்னிப்பு கேட்ட அமைச்சர்.. நடந்தது என்ன?
இனி இப்படி நடக்காது.. மன்னிப்பு கேட்ட அமைச்சர்.. நடந்தது என்ன?
இப்படி ஒரு எம்எல்ஏவா! சற்றும் யோசிக்காமல்...நெகிழ்ச்சியில் மக்கள் - அப்படி என்ன செய்தார்?
இப்படி ஒரு எம்எல்ஏவா! சற்றும் யோசிக்காமல்...நெகிழ்ச்சியில் மக்கள் - அப்படி என்ன செய்தார்?
ABP Nadu Top 10, 31 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 31 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget