மேலும் அறிய

Dharmapuri Murder | காதல் விவகாரம்..கத்தியால் குத்திய அண்ணன்கள்.. பகீர் கிளப்பும் பின்னணி

தருமபுரியில் சகோதரி காதலனை அவர் பணியாற்றும் உணவகத்திற்கே சென்று அப்பெண்ணின் சகோதரர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  இந்த வழக்கில் இரட்டை சகோதரர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பான வாக்குமூலங்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் கடந்த 6 ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி  ஓட்டலில் கிரில் மாஸ்டராக தருமபுரி சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் இரவு 9 மணிக்கு ஓட்டலுக்கு  4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து ஓட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்து விலகி நின்றனர். இதனை தொடர்ந்து கத்தியால் குத்திய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஹோட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை செய்யும் சம்பவம் சிசிடிவி காசியில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  அப்போது முகமது ஆசிப் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் சகோதரர்கள் முகமது ஆசிப்பை கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஓமலூரைச் சேர்ந்த ஆசிப் காதலித்த பெண்ணின் சகோதரர்கள் தான் என காவல் துறையினர் விசாரணையில் உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் ஓமலூர் சென்று விசாரணை நடத்தி சேலம் பகுதியில் பதுங்கி இருந்த ஜனரஞ்சன்,  ஜன அம்சபிரியன் இரட்டை சகோதரர்களை குறித்து விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையில் முகமது ஆசிப் தனது சகோதரியை காதலித்து வந்ததாகவும் பலமுறை கண்டித்தும் கேட்காததால், இரட்டை சகோதரர்கள் ஜனரஞ்சன், ஜன அம்சபிரியன் இருவரும் முகமது அசிப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது ஆசிப் வேலை செய்கின்ற பிரியாணி கடைக்கு, நண்பர்கள் கௌதம் (28), மற்றும்  நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுயை சேர்ந்த பரிதிவளவன் (24) ஆகியோருடன்  பிரியாணி ஒட்டலின் உள்ளே நுழைந்து, முகமது ஆசிப்பை அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றது, காவல் துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஒமலூர் அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜனரஞ்சன், ஜன அம்சபிரியன், மற்றும் கௌதம், பரிதி வளவன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தருமபுரி அருகே சகோதரி காதலித்த இளைஞரை, பெண்ணின் இரட்டை சகோதரர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி வீடியோக்கள்

உதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE
Udhayanidhi stalin | உதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget