ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! களத்தில் இறங்கிய POLICE

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வீடுகளில் வெடி குண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து விழுப்புரம் எஸ் பி அலுவலகத்திற்கு டி ஜி பி அலுவலகம் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. 

உடனடியாக தைலாபுரம் இல்லத்தில் காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் முடிவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி வீடுகளில் வெடி குண்டு இல்லை என்பது தெரியவந்தது. வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி புரளி என தெரியவந்ததும் நிபுணர்கள் கிளம்பி சென்றனர். து. மேலும் ராமதாஸ் இல்லம் முன்பாக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola