Land issue CCTV|சிறுநீர் கழித்த மர்ம நபர்கள்தட்டிக்கேட்ட காவலாளி மீது தாக்குதல்நில உரிமையாளர் புகார்
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் உள்ள சோமையனூரில் வினோத் என்பவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது.இந்த நிலத்தில் மர்ம நபர்கள் சிலர் சிறுநீர் கழித்துள்ளனர்.அதனை அங்கிருந்து காவலாளி கேட்டதற்கு காவலாளியை தாக்க முயன்று தகாத வார்த்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நிலத்தின் உரிமையாளர் வினோத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நிலத்தின் உரிமையாளர் வினோத் சிசிடிவி ஆதாரத்துடன் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தடாகம் போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலத்தின் உரிமையாளர் வினோத்:-
தொடர்ச்சியாக மர்ம நபர்கள் தனக்கு சொந்தமான இடத்தில் தொந்தரவு செய்து வருவதாகவும் தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருவதால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
அது மட்டுமில்லாமல் நிலத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருவதனால் அங்கு பணிகளை செய்ய விடாமல் தொந்தரவு செய்து வருவதாகவும் இதற்கு காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.