Child dies in rainwater | தேங்கி நின்ற மழைநீர்! மூழ்கி உயிரிழந்த குழந்தை! கையில் DRESS. கதறி அழுத தாய்

Continues below advertisement

வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் ஆடையை கையில் வைத்துக் கொண்டு தாய் சம்பவ இடத்தில் உட்கார்ந்து கதறி அழும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்தது.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தநிலையொல் சென்னை மாங்காட்டில் வசித்து வந்த இரண்டரை வயது குழந்தை பிரனிகா தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. 

சம்பவத்தன்று குழந்தையும் தாயும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். திடீரென அவர் கண்விழித்து பார்த்த போது அருகில் குழந்தை இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குழந்தை மரணத்திற்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது, 

தனது குழந்தையின் ஆடையை கையில் வைத்துக் கொண்டு அவரது தாய் மழைநீர் தேங்கிய இடத்தில் உட்கார்ந்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola