Selvaperunthagai Angry|அயோக்கிய பய..சாதி வெறிநான் தண்ணிய தொடக்கூடாதா?அதிகாரியை திட்டிய செ.பெருந்தகை
இவங்களாம் தண்ணீ திறக்கக்கூடாது தொடக்கூடாதுனு நினைக்கிறீங்க..எப்போது தான் இந்த சாதி வெறியில் இருந்து மீண்டு வரபோறோமோ என எம் எல் ஏ வும் காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வப்பெருந்தகை உபரி நீர் திறப்பது பற்றி தனக்கு தெரிவிக்காத பொதுப்பணித்துறை அதிகாரியை வசைபாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..மேலும் அதிகாரி ஒருவரை அயோக்கியன் எனவும் இந்த துறை வெறிபிடித்து இருக்கிறது எனவும் அவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் எவ்வளவு திறந்து விடப்பட்டுள்ளது, பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடந்துள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். ஆய்வுகளை முடித்த பின் பொதுப்பணித்துறை அதிகாரி தனசேகரனை, எம். எல்.ஏ. செல்வப் பெருந்தகை வசை பாடினார் அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள் மூன்று ஆண்டுகள் நான் திறந்து விட்டேன் கடந்த ஆண்டு கூட என்னிடத்தில் சொல்லவில்லை நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம் பூசணிக்காய், தேங்காய் உடைத்து பூஜை போடுகிறீர்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு தண்ணீர் திறப்பது சொல்லவில்லை இவர்களெல்லாம் தண்ணீரை திறக்க கூடாது, தொடக்கூடாது என நினைக்கிறீர்கள். அங்கு ஒரு அயோக்கிய அதிகாரி அமர்ந்திருக்கிறார் எப்போது தான் இந்த சாதி வெறியில் இருந்து மீண்டு வரப போகிறோமோ என பொதுப்பணித்துறை அதிகாரியை வசை பாடி விட்டு எம்.எல்.ஏ. சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உபரிநீர் திறப்பதை முறையாக தகவல் தெரிவிக்காத பொதுப்பணித்துறை அதிகாரியை ஆய்வுக்கு வந்த எம். எல்.ஏ. செலவபெருந்தகை கோபமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது