சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திணறும் விக்கிரவாண்டி TOLLGATE-ஐ கடந்த 63000 கார்கள் | Vikravandi

Continues below advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்று செல்கின்றன. 

தீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து அதிகமானோர் தென் மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகை, திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து தொடர் விடுமுறை தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் காரில் பயணம் செய்து செல்கின்றனர். இதனால் அதிகளவில் கார்கள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன. 

விக்கிரவாண்டி இருவேல் பட்டு பகுதியில்  மேம்பாலம் கட்டுமான பணி நடெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்  வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாகியதால்  போக்குவரத்து போலீசாரும் டோல்கேட் ஊழியர்களும் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வழக்கமாக செல்லும் ஆறு  வழிகளில் கூடுதலாக இரண்டு வழிகள் திறகப்பட்டு 8 வழிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றன. நேற்றைய தினம் மட்டும் 48,000 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்ற நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை மட்டும் 15000 ஆயிரம்  வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளன. இதுவரை சுங்கசாவடியை 63000 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola