Chennai Mayor priya raja: சென்னையை ஆளப்போகும் 28 வயது இளம்பெண்..யார் இந்த பிரியா?
Chennai Mayor priya raja: திமுக மேயர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு உதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த ப்ரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் இவர் வடசென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மேயர் பதவி முதலமைச்சர் முக ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியவர்கள் வகித்த பதவி. இதற்கு முன்பு தென் சென்னையை சேர்ந்தவ்ர்களே திமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னை சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.




















