தமிழ்நாடு தேர்தல ரத்து பண்ணுங்க.. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு தேர்தல் தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை தேதிக்கும் அதிக நாள்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் பல்வேறு சூழலை கருத்தில் கொண்டே இத்தகையை முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை ரத்து செய்யக்கோரி கடந்த 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே தேர்தல் நடைபெற உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கமுடியாது என கூறி பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.