தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு விஜய் கொடுக்கப்போகும் அந்த முக்கிய பதவி என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது..
அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தி செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் செங்கோட்டையன் அடுத்ததாக எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது..
இந்நிலையில் தான் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு அக்கட்சியின் மீது மனக்கசப்பு இருந்து வருவதை அறிந்த விஜய் செங்கோட்டையனுக்கு வலைவீச காய்களை நகர்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது..
கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய் பிற கட்சிகளின் ஃபேஸாக இருக்கும் அதிருப்தி தலைவர்களை லிஸ்ட் போட்டு தூண்டில் போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் விசிகவில் முக்கிய முகமாக இருந்த ஆதவ் அர்ஜுனாவை தட்டித்தூக்கினார். மேலும் வந்த உடனே தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியை ஆதவ்க்கு வழங்கினார். இதனையடுத்து இன்னும் சில முக்கிய தலைவரகளுக்கு தவெக வலைவிரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த லிஸ்டில் டாப்பில் இருந்தவர் தான் செங்கோட்டையன்.
அதிமுகவின் கொங்கு முகமாக இருந்த செங்கோட்டையனை தவெகவுக்கு கொண்டு வந்தால் கொங்கு பகுதியில் தவெகவுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என எண்ணி இந்த மூவ் ஐ கையில் எடுத்திருக்கிறார் விஜய்..அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதல்கள் தவெகவுக்கு சாதகமாக அமைய எப்படியோ பேசி செங்கோட்டையனை விஜய் ஓகே சொல்ல வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது..எனவே விரைவில் செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது ரொம்ப சந்தோசம் என கூறியது முதல் இன்று ராஜினாமா செய்த பிறகு தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு புன்னகைத்து 1 நாள் பொறுங்கள் நானே சொல்கிறேன் என சொன்னது வரை ஹிண்ட்களை அள்ளி வீசியுள்ளார் செங்கோட்டையன்.
இச்சூழலில் செங்கோட்டையன் தவெகவில் இனைந்தால் அவருக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். அதிமுக போன்ற பாரம்பரியம் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிக்கு தனக்கு அடுத்த லெவல் பதவியை தான் கொடுப்பார் விஜய் என்கின்றனர் தவெக வட்டாரங்கள்..கரூர் சம்பவத்தை அடுத்து புஸ்ஸி ஆனந்தை ஏற்கனவே விஜய் ஓரம்கட்டத்தொடங்கிவிட்டதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், புஸ்ஸிக்கு செக் வைக்கும் அளவில் ஓர் பதவியை தான் செங்கோட்டையனுக்கு வழங்குவார் விஜய் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.