தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

Continues below advertisement

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள விஜய் சில கணக்குகளை போட்டு செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்கின்றனர். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என காலக்கெடு விதித்த முன்னாள அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அதன்பிறகு சைலண்ட் மோடுக்கு போனார் செங்கோட்டையன். இபிஎஸ்-ஐ வழிக்கு கொண்டு வரலாம் என கணக்கு போட்ட செங்கோட்டையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இந்தநிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஓபிஎஸ் உடன் ஒன்றாக காரில் சென்றார் செங்கோட்டையன். இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைந்து 3 பேரும் ஒன்றாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 3 பேரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது பின்னர் எங்கள் அணியில் செங்கோட்டையன் இணைந்ததில் மகிழ்ச்சி என பேசினார் டிடிவி தினகரன். 

இதனைதொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கினார் இபிஎஸ். அடுத்ததாக செங்கோட்டையன் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி வந்தது. இந்தநிலையில் அவர் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக விஜய் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அரசியல் எதிர்காலத்தை கணக்கில் வைத்து செங்கோட்டையனும் ஒத்துக் கொண்டதாகவும் சொல்கின்றனர். தவெகவிலும் சீனியர்கள் யாரும் இல்லாத நிலையில் இந்த நேரத்தில் சென்றால் கட்சியில் தனக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் என கணக்கு போட்டதாக சொல்கின்றனர்.  

அதேபோல் விஜய்யும் கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சியில் சீனியர்கள் இருக்க வேண்டும் என நினைப்பதாக தெரிகிறது. அதனால் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்தவராகவும் அரசியல் அனுபவம் கொண்டவராகவும் இருக்கும் செங்கோட்டையனை கட்சிக்குள் இழுத்தால் பலமாக இருக்கும் என கணக்கு போட்டு பேச்சுவார்த்தை நடத்தி முடித்ததாக சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola