Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?

Continues below advertisement

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்..இந்நிலையில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை செங்கோட்டையனுக்கு விஜய் வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தி செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்  செங்கோட்டையன் அடுத்ததாக எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்த நிலையில், தவெகவுக்கு டிக் அடித்துள்ளார் செங்கோட்டையன். 

நேற்று தனது கோபிசெட்டிப்பாளையம் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்ததாக தவெக தலைவர் விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு மேற்கொண்டார். அதன் பிறகு இன்று காலை முதலே செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பனையூரில் திரள தொடங்கினர்.

இதனையடுத்து பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்திற்கு வந்தடைந்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனுடன், சத்யபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை செங்கோட்டையனுக்கு விஜய் வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் அமைப்பு பொதுச் செயலாளராகவும் அவர் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து அவர் கட்சி பணிகளில் செயல்படுவார் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்க்கு நேரடியாக தகவல்களை வழங்கும் பவரும் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

செங்கோட்டையனின் இந்த மூவ் அரசியல் களத்தையே அனல்பறக்க வைத்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola