ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death

Continues below advertisement

ஹரியானா ரோதக் என்ற இடத்தில் கூடைப்பந்து கம்பத்தை பிடித்து தொங்கிய போது கம்பம் சரிந்து விழுந்ததில் தேசிய வீரர் ஹார்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காட்சி மனதை உருக்கியது.

கூடைப்பந்து தேசிய வீரர் ஹார்திக் நேற்று பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்துள்ளார். மைதானத்தில் இருந்த கூடைப்பந்து கம்பம் சரியாக பொருத்தப்படாமல் இருந்துள்ளது. அவர் பயிற்சியில் அந்த கம்பத்தை ஓடி வந்து பிடித்து தொங்கும் போது திடீரென அந்த கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. கூடைப்பந்து வீரர்கள் வழக்கமாக இதுபோன்ற பயிற்சிகளைச் செய்வார்கள். ஹார்திக் முதலில் இதைச் செய்யும்போது எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. இருப்பினும், இரண்டாவது முறையாக அதைச் செய்தபோது எதிர்பாராத விதமாகக் கூடைப்பந்துக் கம்பம் அப்படியே சாய்ந்து அவர் மீது விழுந்தது. அதன் முழு எடையும் அவரது மார்பின் மீது இறங்கியது.

இதனை பார்த்த சக வீரர்கள் மற்றும் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.. அதன் முழு எடையும் அவரது மார்பின் மீது இறங்கியதில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழிந்தார். இதன் காட்சி வெளியாகி மனதை உருக்கியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola