நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில் வந்திறங்கிய AR ரகுமான் AR Rahman in Nagapattinam Nagore Dargah
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469வது கந்தூரி விழாவுக்கு ஆட்டோவில் எளிமையாக தர்காவிற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்
நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நேற்றிரவு முக்கியமான சந்தனக்கூடு ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடந்தது.நாகை-நாகூர் பகுதிகளில் வடிவமைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட அலங்கார ரதங்கள் நாகை அபிராமி அம்மன் திடல் அருகே ஒருங்கிணைக்கபட்டு, அரசு மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபிஸ் சாலை, வெளிப்பாளையம், காடம்பாடி, நாகை அஹமது தெரு வழியாக ஊர்வலம் நாகூர் தர்காவை அடைந்து, இன்று அதிகாலை பாதுஷா சாகிபு ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபில் சந்தனம் பூசும் சடங்கு மிகவும் மரியாதையான முறையில் நடைபெற்றது.
இதில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண ஆட்டோவில் எளிமையாக வருகை தந்து வெள்ளை குர்தா அணிந்து மக்கள் நடுவில் கலந்து, சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் மரியாதையுடன் பங்கேற்றார்; இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்து, கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கிடையிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்காக கலந்துகொண்டு, 469வது கந்தூரி விழா ஆன்மிக ஒற்றுமையும் சமூக சகோதரத்துவமும் வெளிப்படுத்தியுள்ளது.