Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு

Continues below advertisement

புதுச்சேரியில் பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேருந்து வசதி கேட்டு நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட வம்பாபேட் முதல் பனித்திட்டு வரையிலும், பிள்ளையார்குப்பம் முதல் நரம்பை வரையிலான தார் சாலை ரூ.1.59 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர்.

அப்போது நரம்பை கிராமத்தில் பூமி பூஜையை முடித்து விட்டு காரில் புறப்பட்ட முதலமைச்சர் ரங்காமியிடம், நரம்பை கிராமத்தை சேர்ந்த ஒருவத் கிராமத்திற்கு ஏன் பேருந்து இயக்கவில்லை என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு  முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் ஒரு வாரத்திற்குள் பேருந்து வந்து விடும் என தெரிவித்த நிலையில் ஒரு வாரத்திற்குள் பேருந்து வரவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன் அவர்களை சமாதானம் செய்தார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola