மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 47 ரயில்களில் புதிய நிறுத்தங்கள்: உங்கள் ஊரில் ரயில்கள் நிற்குமா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழகம் மற்றும் கேரளா வழியாக செல்லும் 47 ரயில்களுக்கு பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தங்களை வழங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி:தமிழகம் மற்றும் கேரளா வழியாக செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 47 ரயில்களுக்கு பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தங்களை வழங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மண்டலம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நிறுத்தங்கள் பெரும்பாலும் வரும் ஜனவரி 26, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை, சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பயணிகளுக்கு பெரும் பயனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ரயில்கள் மற்றும் நிறுத்த விவரங்கள்

தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மண்டலம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி, சென்னை எழும்பூர், தாம்பரம், ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு

1. சென்னை - தென் மாவட்ட ரயில்கள்

 * சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12633): ஜனவரி 26 முதல் கோவில்பட்டி நிலையத்தில் அதிகாலை 02.03 மணிக்கு நின்று செல்லும்.

* தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694): தூதிமேலூர் நிலையத்தில் இரவு 21.10 மணிக்கு நின்று செல்லும்.

* தாம்பரம் - செங்கோட்டை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20683): இந்த ரயிலுக்கு செங்கல்பட்டு (21.18 மணி), சிவகங்கை (05.13 மணி) மற்றும் பேராவூரணி (03.30 மணி) ஆகிய மூன்று நிலையங்களில் புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* செங்கோட்டை - தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20684): மறுமார்க்கத்தில் இந்த ரயில் சிவகங்கை மற்றும் பேராவூரணி நிலையங்களில் நிறுத்தப்படும்.

2. ராமேஸ்வரம் - சென்னை வழித்தடம்

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16103) மற்றும் அதன் மறுமார்க்க ரயில் (16104) ஆகிய இரண்டு ரயில்களும் இனி அதிராமப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் பேராவூரணி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இது டெல்டா மாவட்ட மற்றும் கடலோர பகுதி பயணிகளுக்கு வரப்பிரசாதமாகும்.

3. அந்த்யோதயா மற்றும் இதர விரைவு ரயில்கள்

* தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (20691/20692): இரு மார்க்கங்களிலும் செல்லும் இந்த ரயில் இனி மணப்பாறை, திருமங்கலம் மற்றும் நாங்குநேரி ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.

* காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (16187): ஜனவரி 27 முதல் கொடுமுடி நிலையத்தில் நின்று செல்லும்.

* புதுச்சேரி - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16111/16112): கருங்குழி, தக்கோலம், வில்லியம்பாக்கம் மற்றும் முண்டியம்பாக்கம் ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கூடுதல் வசதிகள்

திருச்சிராப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்காக சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* திருச்சி - சென்னை எழும்பூர் (22675/22676) சோழன் எக்ஸ்பிரஸ்: இரு மார்க்கங்களிலும் திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தப்படும்.

* சென்னை - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் (16179/16180): இனி திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் நின்று செல்லும்.

* சென்னை - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865): அதிகாலை 03.13 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

* விழுப்புரம் - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (16867/16868): பிச்சாண்டார் கோவில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் வெளிமாநில ரயில்கள்

தமிழகத்தை கடந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் மாற்றங்கள் உள்ளன.

*சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127/16128): கேரளாவின் அம்பலப்புழா நிலையத்தில் நிறுத்தப்படும்.

*புருலியா - திருநெல்வேலி சூப்பர்ஃபாஸ்ட் (22605/22606): ஆரணி ரோடு நிலையத்தில் நின்று செல்லும்.

*கச்சிகுடா - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16353/16354): பிப்ரவரி 1 முதல் ராசிபுரம் நிலையத்தில் நிறுத்தப்படும்.

பயணிகள் கவனத்திற்கு

இந்த புதிய நிறுத்தங்களுக்கான கால அட்டவணை மற்றும் வருகை/புறப்பாடு நேரங்கள் குறித்த கூடுதல் விவரங்களை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தகவல் மையங்களில் சரிபார்த்துக்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் வினோத்.R தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பயணம் இனி எளிது: கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!விபரம் இதோ.
ஓணம் பயணம் இனி எளிது: கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!விபரம் இதோ.
மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!
மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget