மேலும் அறிய

Whatsapp | வாட்சப் பயனாளர்களை அச்சுறுத்தும் ட்ரோஜன் வைரஸ்! உங்கள் ஃபோனை எப்படி பாதுகாப்பது?

ட்ரோஜன் வைரஸை பரப்பி தரவுகளை எடுத்து, வங்கிக் கணக்கிலிருந்து பணம் வரை எடுக்கும் வாட்சப் MOD ஆப்கள். பயனாளர்கள் கவனத்துடன் இருக்க சைபர்செக்யூரிட்டி வலியுறுத்தல்.

உலகெங்கிலும் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அப்ளிகேஷன்களில் ஒன்று வாட்சப். குறிப்பாக இந்தியாவில் இதன் பயன்பாடு மிக அதிகம். உடனடியாக செய்திகளை உலகெங்கிலும் அனுப்புவதற்கும், காணொலி அழைப்புகள் மற்றும் சாதாரண அழைப்புகளை மேற்கொள்வதற்கும் பயன்படும் இந்த அப்ளிகேஷனை பேஸ்புக் நிறுவனம் வாங்கி நடத்திக்கொண்டுள்ளது.

இந்த ஆப்பில் இல்லாத சில வசதிகளை கொண்டு உருவாக்கப்படும் ஆப்களுக்கு பெயர்தான் MOD ஆப். வாட்சப்பிற்கு அதேபோல நிறைய MOD வெர்ஷன்கள் உள்ளன. அதில் கிடைக்கும் வசதிகள் உதாரணத்திற்கு, ஒவ்வொரு சாட்டிற்கும் ஒவ்வொரு வால்பேப்பர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் தீம், தனி எழுத்து வடிவம், ஸ்டேட்டஸில் பெரிய வீடியோக்கள் பதிவு செய்யும் வசதி, இந்த பில்ட் ஸ்டிக்கர்கள், ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்யும் வசதி போன்ற பயனுள்ள வசதிகள் பல உண்டு என்றாலும், இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற ஆப்களை பயன்படுத்துவது நம் தரவுகள் மற்றும் தனியுரிமை பாதுகாப்புகள் கேள்விக்குறியாகின்றன.

Whatsapp | வாட்சப் பயனாளர்களை அச்சுறுத்தும் ட்ரோஜன் வைரஸ்! உங்கள் ஃபோனை எப்படி பாதுகாப்பது?

இப்படியான பல வசதிகள் கண்டு கவரப்பட்டு பயன்படுத்தினாலும், அதிகரப்பூர்வமற்ற ஆப்களை பயன்படுத்துவது பயன்பாட்டாளர்களின் தனியுரிமையை கேள்விக்குட்படுத்துகிறது. இது போன்ற ஆப்கள் பிளே ஸ்டோரில் கிடைப்பதில்லை. அதன் ஆபத்து அறிந்து அவர்கள் அதனை பயனாளர்களுக்கு உபயோகிக்க ஊக்குவிப்பதில்லை. இது போன்ற MOD ஆப்கள் தனி வலைதளங்களில் கிடைக்கும். இவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தினால், ஆப்பிற்கான அப்டேட்களை ஆப்பே தரவிறக்கி கொடுக்கும்.

இது போன்ற ஆப்கள் இணையத்தில் நிறைய கிடைத்தாலும், ஒரு சில பிரபலமான ஆப்களை உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எஃப் எம் வாட்சப். இந்த ஆப்பின்  16.80.0 வெர்ஷனை டவுன்லோடு செய்பவர்கள் மொபைலில் ட்ரோஜன் வைரஸ் உள்ளே புகுவதாக கூறப்படுகிறது. ஒருமுறை அந்த வைரஸ் நம் மொபைலுக்குள் வந்துவிட்டால், அது பல ஆபத்தான தரவுகளை நம் மொபைலில் நமது அனுமதி இல்லாமலே இன்ஸ்டால் செய்கிறது. இந்த ஆப்பை நாம் திறந்த உடனே நமது தரவுகளை எடுத்துக்கொள்கிறார்கள், நமது பாஸ்வேர்ட், அக்கவுண்ட் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, அதை ஒரு சர்வரில் இணைகிறார்கள். இந்த ட்ரோஜன் வைரஸின் அபாயங்கள் மற்றும் செயல்பாடுகளை காஸ்பெர்ஸ்கியின் சைபர்செக்யூரிட்டி கண்டுபிடித்துள்ளனர்.

Whatsapp | வாட்சப் பயனாளர்களை அச்சுறுத்தும் ட்ரோஜன் வைரஸ்! உங்கள் ஃபோனை எப்படி பாதுகாப்பது?

காஸ்பெர்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்ளே போகும் வைரஸ் தேவையில்லாத செயல்பாடுகளை மொபைலில் ஆன் செய்து, அதற்கேற்றார்போல் மொபைலை மாற்றுகிறது. மாற்றி முழு ஸ்க்ரீனிலும் விளம்பரங்கள் வரவைப்பது போன்ற வேலைகளை செய்கிறது. நமது வங்கி கணக்கையும் ஹேக் செய்யும் இந்த வைரஸ் நமது பணத்தையும் எடுக்கவல்லது.

இது போன்ற MOD ஆப்புகளை ஊக்குவிக்காத காஸ்பெர்ஸ்கி, பயனாளர்களை இது போன்ற ஆப்களை தரவிறக்கம் செய்யாதிருக்க வலியுறுத்துகிறது. கூகுளின் பிளே ஸ்டாரில் இருந்து டவுன்லோட் செய்தாலும் அதன் ரிவியூக்களை படித்துவிட்டு, ஆராய்ந்து தரவிறக்க வலியுறுத்துகிறது. 

தலைப்பு செய்திகள்

Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget