மேலும் அறிய

Whatsapp New Feature: புது அப்டேட்டை தந்தது Whatsapp.. க்வாலிட்டி குறையாம போட்டோ அனுப்புறது எப்படி தெரியுமா?

வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை தரம் குறையாமல் பகிரும் வசதியை, மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை தரம் குறையாமல் பகிரும் வசதியை, மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

குவியும் அப்டேட்கள்:

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நீண்ட நாட்களாக பயனாளர்கள் எதிர்கொண்டு வந்த ஒரு பெரிய பிரச்னைக்கு,   வாட்ஸ்-அப் நிறுவனம் ஒரு முடிவு கட்டியுள்ளது.

தரம் குறையும் புகைப்படங்கள்:

அதன்படி, வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை நேரடியாக பகிரும்போது அதன் தரம் குறைகிறது என்பது, பயனாளர்களின் நீண்ட கால புகாராக உள்ளது. தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, அவற்றை ஃபைல் ஆக மட்டுமே பகிர முடியும். இந்நிலையில் பயனர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ்-அப் செயலி, ஏற்கனவே பீட்டா வெர்ஷன் அப்டேட்டை வழங்கியிருந்த நிலையில், தற்போது அதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்:

புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் உண்மையான தரம் குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும். அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் (HD) ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் தரம் குறையாமல் உறுதி செய்யலாம். STANDARD QUALITY & HD QUALITY என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, பயனாளர்கள்  STANDARD QUALITY எனும் ஆப்ஷனை ஆன் செய்து இருக்க வேண்டும்.

யாருக்கு இந்த அப்டேட் கிடைக்கும்?

இந்த புதிய அப்டேட் ஏற்கனவே உருவாக்கப்பட்டு பீட்டா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பயனாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப அந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  ஆண்ட்ராய்டு 2.23.12.13க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும், ஐஓஎஸ் 23.11.0.76 க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும் இந்த புதிய அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ்-அப் குழுமம் புதிய அம்சத்தை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. எனவே, இந்த புதிய அம்சம் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கப்பெற சிறிது காலம் ஆகும் என கருதப்படுகிறது. இதன் மூலம், நீண்ட காலமாக வாட்ஸ்-அப் செயலியில் இருந்த பெரிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. அதோடு, புகைப்படங்களை இனி ஃபைல் ஆக கன்வெர்ட் செய்து பகிர வேண்டிய அவசியம் பயனாளர்களுக்கு இருக்காது. இனி நொடிப்பொழுதில் உண்மையான தரத்தில் புகைப்படங்களை பயனாளர்கள் பகிர்ந்துகொள்ளலாம். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
Embed widget