மேலும் அறிய

WhatsApp : பேஸ்புக் ஸ்டோரி மாதிரியே.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வருகிறது சூப்பர் அப்டேட்!

நீங்கள் குறிப்பிட்டவரின் ஸ்டேட்டஸை பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட நபரின் பெயரை டைப் செய்து தேடிச் சென்று பார்க்கலாம்.

பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப். இந்நிலையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அடுத்த அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்

என்ன அப்டேட்..

இப்போது ஸ்டேட்டர் தனி லிஸ்டாக இருக்கும். நீங்கள் ஸ்டேட்டஸ் பக்கம் போனால் உங்கள் லிஸ்டில் இருக்கும் ஒவ்வொரு ஸ்டேட்டஸும் ஓடும். நீங்கள் குறிப்பிட்டவரின் ஸ்டேட்டஸை பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட நபரின் பெயரை டைப் செய்து தேடிச் சென்று பார்க்கலாம். சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட நபருடன் தொடர்ந்து சேட்டிங்கில் இருந்தாலும் அவர் என்ன ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார் என்பதை தேடிச்சென்றால்தான் தெரியும். அதற்காகத்தான் புது அப்டேட்டை தற்போது கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப். அதாவது பேஸ்புக்கில் ஸ்டோரி இருப்பதுபோல இனி நமக்கு குறிப்பிட்ட நபரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தெரியவரும். சாட் செய்யும்போதே அந்த நபரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை அவரது ப்ரபைலில் க்ளிக் செய்து பார்க்கலாம். இந்த அப்டேட் தற்போது சோதனைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்ட் 2.22.18.17 வெர்ஷனில் சோதனை முறையில் உள்ளது. இன்னும் சில அப்டேட்களையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.

WhatsApp : பேஸ்புக் ஸ்டோரி மாதிரியே.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வருகிறது சூப்பர் அப்டேட்!

டெலிட் செய்யலாம்..  

வாட்ஸ் அப் தொடர்பான அப்டேட் சோதனைகளை வெளியிடும் WABetaInfoன் தகவலின்படி வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் இனி குரூப்பில் பதிவிடப்படும் எந்த ஒரு மெசேஜையும் டெலிட் செய்ய முடியும். குறிப்பிட்ட குரூப்பில் யார் மெசேஜ் செய்திருந்தாலும் அதனை லாங் ப்ரஸ் செய்து குரூப் அட்மின் டெலிட் செய்யலாம். குரூப்பில் தேவையற்ற விவாத பேச்சுகளை தவிர்க்கும் விதத்தில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

online..

தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும்.  இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது. ஆன்லைனைப் பார்த்து நமக்கு சாட் செய்வார்கள். அந்த சிக்கலை சரிசெய்ய தற்போது அப்டேட் கொண்டு வருகிறது வாட்ஸ் அப். அதன்படி ஆன்லைன் என்பதை சிலருக்கோ  அல்லது யாருக்குமே காட்டாமல் இருக்கலாம் என்றும் அந்த அப்டேட்டுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

அதேபோல நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை வேண்டுமானால் தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் மட்டுமே செய்ய முடியும். அதில் ஒரு அப்டேட்டாக, அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியும் விரைவில் வரும் எனத் தெரிகிறது. இதெல்லாம் தற்போது சோதனை முறையில் இருப்பதால் விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட்டு அது வரவேற்பை பெற்றால்தான் அனைவருக்கும் கிடைக்கும்

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget