மேலும் அறிய

WhatsApp New Feature: யாருக்கும் தெரியாமல் குரூப்பிலிருந்து வெளியேறலாம்.. வருகிறது புதிய வாட்ஸ் அப் அப்டேட்..

குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுவது, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட வசதிகளை வாட்ஸ் அப்(WhatsApp) நிறுவனம் அறிமுகப் படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுவது, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வசதிகளை வாட்ஸ் அப்(WhatsApp) நிறுவனம் அறிமுகப் படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

WABetaInfoவின் தகவலின் படி இந்த வசதிகள் தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும் விரைவில் இவைகள் பீட்டா டெஸ்டர்களின் சோதனைக்காக வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் குழுவில் இருக்கும் நபர், அந்த குழுவில் இருந்து வெளியேறினால் அவர் குழுவில் இருந்து வெளியேறியது குறித்த தகவல், குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும் படி இருக்கும். தற்போது வெளியாக இருக்கும் வாட்சப்பின் புதிய அப்டேட் படி, குழுவில் இருக்கும் நபர் அந்த குழுவில் இருந்து வெளியேறினால், குழுவின் அட்மினைத் தவிர வேறு யாருக்கும் அந்த நபர் குழுவில் இருந்து வெளியேறியது தெரிய வராது.

WABetaInfo வெளியிட்டிருக்கும் ஸ்க்ரீன்ஷாட் படி குழுவில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டால் “only you and group admins will be notified that you left the group” என்ற வாசகத்துடன் கூடிய பாப் அப் தோன்றும். அதில் எக்ஸிட் க்ரூப் என்பதை கொடுத்தவுடன், யாருக்கும் தெரியாமல் அந்த குழுவில் இருந்து வெளியேறிவிடலாம். இந்த வசதியானது இப்போதைக்கு வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பிற்கு உருவாக்கும் பணிகள் நடைபெற்றாலும், விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்க்கு கொண்டுவரப்படும். குழுவில் தற்போது அதிகபட்சமாக 256 பேரை மட்டுமே சேர்க்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அதை 512 ஆக அதிகரிக்கும் வசதியை உருவாக்கிக்கொண்டிருப்பதாக சமீபத்தில் தான் செய்திகள் வெளியாகியிருந்தது.


WhatsApp New Feature: யாருக்கும் தெரியாமல் குரூப்பிலிருந்து வெளியேறலாம்.. வருகிறது புதிய வாட்ஸ் அப் அப்டேட்..

இந்த வசதி மட்டுமல்லாது கம்யூனிட்டி வசதியையும் வாட்சப் நிறுவனம் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது. இரண்டு வேறு குழுக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரலாம். இதன் மூலம் சிறு உரையாடல்களை செய்யலாம். இந்த கம்யூனிட்டி வசதியில் அறிவிப்பு வசதியும், எந்த குழுக்களை இணைக்கலாம் என்பதை அட்மின்கள் முடிவு செய்யும் வகையிலான பிரத்யேக வசதிகளும் இதில் இடம்பெறும்.

அதோடு, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பகிரப்படும் லிங்குகளின் ப்ரிவியூவை மாற்றும் வேலைகளிலும் இருக்கிறது வாட்ஸ் அப். தற்போதைய நிலையில் லிங்க்கை லாங் ப்ரஸ் செய்தால் தான் என்ன லிங்க் என்ன என்பது தெரிய வரும். ஆனால் தற்போதைய உருவாக்கத்தின் படி, லிங்க்கை ஸ்டேடஸில் வைத்து சிறிது நேரம் வைத்திருந்தால், அந்த லிங்கிற்கான ப்ரிவியூ உருவாகிவிடும். பின்னர் ஷேர் செய்யலாம். அதனால், அது என்ன லிங்க் என்பது, மற்றவர்களுக்கு அதை க்ளிக் செய்யாமலேயே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


WhatsApp New Feature: யாருக்கும் தெரியாமல் குரூப்பிலிருந்து வெளியேறலாம்.. வருகிறது புதிய வாட்ஸ் அப் அப்டேட்..

ஃபேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்யும் வசதிகள் இருப்பது போன்றே ,வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கும் ரியாக்ட் செய்யும் வசதியை சமீபத்தில் தான் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget