மேலும் அறிய

’90 நாட்கள் வரை நீட்டிப்பு!’ - மறைந்துபோகும் மெசேஜ்களுக்கு வாட்சப் அறிமுகப்படுத்தும் புதிய செட்டிங்!

மறைந்து போகும் மெசேஜ்களின் காலத்தை நீட்டிக்கப் போவதாக வாட்சாப் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 நாட்கள் வரை வாட்சாப் மெசேஜ்களை மறைந்து போகும் வசதியை வாட்சாப் அறிமுகப்படுத்தவுள்ளது.

மறைந்து போகும் வாட்சாப் மெசேஜ்களின் காலத்தை நீட்டிக்கப் போவதாக வாட்சாப் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 நாட்கள் வரை வாட்சாப் மெசேஜ்களை மறைந்து போகச் செய்யும் வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறு 90 நாட்களில் மெசேஜ்கள் மறைந்து போவதால், பயன்படுத்துவோரின் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு, வாட்சாப் செயலியில் மெசேஜ்கள் மறைந்து போகும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் கடந்தவுடன், பயன்படுத்துவோரின் ஒப்புதல் இல்லாமலே, அவர்களது மெசேஜ்களை அழிக்கும் வசதியாக இது இருக்கிறது. தற்போது இதன் கால அளவு 7 நாட்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது, இந்த வசதியை வாட்சப் பயன்படுத்துவோர் பயன்படுத்தினால், 7 நாட்களில் அவர் அனுப்பிய மெசேஜ்கள் அனைத்தும் அழிந்துவிடும். இது அறிமுகப்படுத்தியது முதல், இதன் கால அளவு 7 நாட்கள் என்றே குறிப்பிடப்பட்டு வந்தன. தற்போதைய தகவல்களின் படி, அடுத்து வரப்போகும் வாட்சப் வெர்ஷன்களில், இந்தக் கால அளவு 90 நாட்கள், 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரங்கள் என ஆப்ஷன்களாக அளிக்கப்படவுள்ளன.

’90 நாட்கள் வரை நீட்டிப்பு!’ - மறைந்துபோகும் மெசேஜ்களுக்கு வாட்சப் அறிமுகப்படுத்தும் புதிய செட்டிங்!

இதன் மூலம், வாட்சாப் மெசேஜ்களை மறைந்து போகச்செய்யும் வசதியை 24 மணி நேரங்களுக்குள் குறைத்து வைக்கும் வசதியும் வெளியாகவுள்ளது தெரிய வந்திருக்கிறது. கடந்த மாதம், மெசேஜ்களை மறையச் செய்யும் வசதியில் ஒரு பகுதியாக, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஒரு முறை மட்டுமே பார்க்கும் அம்சமும் வெளியானது. 

இதன் மூலம், நாம் ஒரு படத்தையோ, வீடியோவையோ மற்றொருவருக்கு அனுப்பும் போது, 'View Once' என்று குறிப்பிட்டால் நாம் அனுப்பியதைப் பெறுபவர் அதனைப் பார்த்தவுடன் அது அழிந்துவிடும். இதே அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் பிரசித்தி பெற்ற ஒன்று. அதன் தொடர்ச்சியாகத் தற்போது வாட்சப் செயலியும் இதே வசதியைப் பின்பற்றி வருகிறது.

’90 நாட்கள் வரை நீட்டிப்பு!’ - மறைந்துபோகும் மெசேஜ்களுக்கு வாட்சப் அறிமுகப்படுத்தும் புதிய செட்டிங்!

View Once அம்சத்தைப் பயன்படுத்தும்போது, அதனைப் பெறுபவர் அதனை 14 நாள்களுக்குள் திறக்காவிட்டால் அது அழிந்துவிடும். அப்படி அனுப்பப்படும் மெசேஜை பார்வார்ட் அனுப்புவதோ, அதை சேவ் செய்யவோ, ஷேர் செய்யவோ, ஸ்டார் மார்க் செய்யவோ முடியாது. எனினும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ள முடியும். 

90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த வசதியைத் தற்போது Beta versionகளில் வாட்சாப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. அதனால் இந்த வசதி இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் நம் பயன்பாட்டுக்கு வரலாம். மேலும் வாட்சாப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்கள் முதலில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கும், சிறிது இடைவெளிக்குப் பிறகு ஆப்பிள் ஐபோன் வசதிகளுக்கும் இந்த அம்சங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget