Whatsapp Down: என்னதாங்க ஆச்சு.. பரிதவிக்கும் பயனாளர்கள்.. முடங்கியது வாட்ஸ் ஆப்..
Whatsapp Outage : அரை மணிநேரத்துக்கு மேலாக வாட்ஸ் ஆப் சேவை முடங்கியது.
![Whatsapp Down: என்னதாங்க ஆச்சு.. பரிதவிக்கும் பயனாளர்கள்.. முடங்கியது வாட்ஸ் ஆப்.. Whatsapp Down: WhatsApp services have been down for the last 30 minutes Whatsapp Down: என்னதாங்க ஆச்சு.. பரிதவிக்கும் பயனாளர்கள்.. முடங்கியது வாட்ஸ் ஆப்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/25/6c6c312cb19b1177b76affab7031485a1666683493502571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Whatsapp Outage : கடந்த அரைமணிநேரத்திற்கு மேலாக வாட்ஸ்-அப் பக்கத்தில் உள்ள க்ரூப்பில் போடும் செய்தி பதிவாகவில்லை. தனிநபர் மற்றும் குழுக்கள் பக்கத்தில் நாம் பதிவிடும் செய்தி சென்றடையாமல், பெறப்படாமலும் முடங்கியுள்ளது. இதையடுத்து, உடனடியாக நெட்டிசன்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் #whatsappdown என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து வேடிக்கையான மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
WhatsApp services have been down for the last 30 minutes. pic.twitter.com/9WL4mMFTRO
— ANI (@ANI) October 25, 2022
உலகம் முழுவதும் முழுவதும் தற்போது இந்த சேவை முடங்கியுள்ளதால் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் பரிதவித்து வருகின்றனர். வாட்ஸ் ஆப் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது இதுவரை தெரியவில்லை. இது உண்மையில், உலகளாவிய செயலிழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
#WhatsAppDown is already trending on #Twitter, with users taking to the microblogging platform to share their frustrations and hilarious memes.https://t.co/WMaeGi2vOA pic.twitter.com/3P5ICvI9Ze
— ABP LIVE (@abplive) October 25, 2022
முடங்கிய வாட்ச் ஆப் சேவை விரைவில் சீராகும் : மெட்டா தகவல்
பல்வேறு நாடுகளில் முடங்கியுள்ள வாட்ஸ் ஆப் சேவையை சீரமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். விரைவில் அனைவரது வாட்ஸ் ஆப்பை மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று வாட்ஸ் ஆப் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேடிக்கையான மீம்ஸ்:
Me after restarting my phone ten times just to realize that WhatsApp is down#whatsappdown pic.twitter.com/bJhdaqFNkM
— PHILEMON (@Amgephil) October 25, 2022
Mark zuckerberg right now#WhatsAppDown #WhatsApp pic.twitter.com/37dhrQc9Kz
— 𝐒𝐢𝐝 (@Sid_speaks58) October 25, 2022
Me running to Twitter to confirm if Whatsapp is truly doing. #whatsappdown pic.twitter.com/xtsmtJs4oS
— Belberry (@bellerberry) October 25, 2022
வாட்ஸ் ஆப் இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் பயனர்களையும், உலகளவில் 2.5 பில்லியனுக்கு அதிகமான பயனர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)