மேலும் அறிய

TickTock in India | பெயரில் மாற்றம் செய்து மீண்டும் களமிறங்க துடிக்கும் டிக் டாக்! காய்நகர்த்தும் ByteDance!

பப்ஜி செய்த அதே ஸ்டண்டை கையில் எடுக்கும்  TikTok,செயலியின் பெயரை TickTock என்று மாற்றி களத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் எனக் கூறி பப்ஜி, ஷேர் சாட், இஎஸ் பைப் எக்ஸ்ப்லோரர் உள்ளிட்ட 59 செயலிகள் நீக்கப்பட்டன. சற்று தாமதிக்கப்பட்ட நிலையில் டிக் டாக்கும் அதிரடியாக நீக்கப்பட்டது. இந்தியாவில் அசுர வளர்ச்சியில் சென்றுகொண்டிருந்த டிக் டாக் திடீரென சறுக்கி விழுந்தது.

திடீரென தடை செய்யப்பட்டதால் நிறுவனத்திற்கு பெரிய அடி என்றாலும், டிக் டாக் ரசிகர்கள் என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு சென்றுவிட்டார்கள். டிக் டாக்குக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்த நிலையில் அவர்களெல்லாம் தவித்தார்கள். டிக் டாக் இடத்தை நிரப்ப இன்ஸ்டா ரீல்ஸ் கொண்டு வந்தது. இன்னும் சில ஆப்களும் களம் கண்டன. ஆனால் டிக் டாக்கின்  இடம் இதுவரை காலியாகவே உள்ளது. இந்த நிலையில் டிக் டாக் ரசிகளுக்கு வாயில் சர்க்கரை போடும் செய்தியாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டிக் டாக் மீண்டும் இந்தியாவுக்குள் வரவுள்ளதாம். பப்ஜி செய்த அதே ஸ்டண்டை கையில் எடுக்கும்  TikTok, செயலியின் பெயரை TickTock என்று மாற்றி களத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

TickTock in India | பெயரில் மாற்றம் செய்து மீண்டும் களமிறங்க துடிக்கும் டிக் டாக்! காய்நகர்த்தும் ByteDance!

டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் அதற்கான வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. செயலியின் காப்புரிமை தொடர்பான ஆவணங்களை சமர்பித்து இருக்கும் அந்நிறுவனம், பெயரை  TickTock எனக் குறிப்பிட்டும், இந்தியாவின் ஐடி விதிகளை பின்பற்றுவோம் என உறுதி அளித்தும் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. ஒரு படி மேலே போய், வேண்டுமெனால் ஐடி விதியின்படி குறைதீர்க்கும் அதிகாரி ஒருவரையும் நியமிப்போம் எனவும் கூறியுள்ளதாம் பைட்டான்ஸ். உறுதியாக முயற்சிகளை எடுத்து வருவதால் விரைவில் இந்தியாவில் வேறு பெயருடன் டிக் டாக்  களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தி இந்தியாவுக்கான சிறப்பு உருவாக்கமாக புதிய டிக் டாக் இருக்குமென கூறப்படுகிறது. இந்த செய்தியால் டிக் டாக் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர். 

TickTock in India | பெயரில் மாற்றம் செய்து மீண்டும் களமிறங்க துடிக்கும் டிக் டாக்! காய்நகர்த்தும் ByteDance!

முன்னதாக தடை செய்யப்பட்ட பப்ஜியும் இந்தியாவில் இப்படித்தான் நுழைந்தது. பப்ஜி தடைக்கு பிறகு பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல்  கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி  ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, அந்த இடத்தை நிரப்பவும் இல்லை. இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி க்ராஃப்டன் நிறுவனம் மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்த அப்டேட்டாக பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம்செய்து இப்போது களத்திற்கு கொண்டே வந்துவிட்டது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget