மேலும் அறிய

TCS | வீட்டில் இருந்து வேலை பார்த்தது போதும்.. ஆஃபிஸ் வாங்க.. WFHக்கு முழுக்கு போடும் டிசிஎஸ்?!

வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் ஐடி ஊழியர்களை அலுவலகத்தில் பணியமர்த்த டிசிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் மொத்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகள் ஆகியவற்றை சேர்த்து சுமார் 5.28 லட்சம் பேர் பணி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஐடி ஊழியர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தடுப்பூசி செலுத்தியவர்களை வைத்து மீண்டும் அலுவலகங்களை திறக்க சில நிறுவனங்கள் திட்டுமிட்டு வருகின்றன. 

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் பணியமர்த்த திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மிலிந்த் லக்காட் எழுதிய கடிதத்தில், "இந்த ஆண்டு இறுதிக்குள் நம்முடைய நிறுவனங்களில் மீண்டும் ஊழியர்கள் வந்து பணியமர்த்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்முடைய புதிய திட்டமான 25/25 திட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக ஊழியர்கள் அலுவலகத்தில் மீண்டும் பணி செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. 


TCS | வீட்டில் இருந்து வேலை பார்த்தது போதும்.. ஆஃபிஸ் வாங்க.. WFHக்கு முழுக்கு போடும் டிசிஎஸ்?!

எனினும் இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படமாட்டாது. அந்தந்த பகுதிகளில் உள்ள குழுக்களின் தலைவர்கள் முடிவிற்கு ஏற்ப இது செயல்படுத்தப்படும். மேலும் ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி பணி செய்ய தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அந்தந்த பகுதிகளில் இருக்கும் அலுவலகத்தில் இதற்கான நெறிமுறை வகுப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் 25/25 என்ற புதிய வேலை திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி வரும் 2025ஆம் ஆண்டிற்குள் அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும். எஞ்சிய ஊழியர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்தே நிரந்தரமாக பணி செய்யலாம் என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டு முதல் முழுவதுமாக செயல்பாட்டிற்கு வரும் என்று டிசிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: Google playstore | உஷார்..! இந்த 3 போட்டோ எடிட்டிங் ஆப் ரொம்ப ரிஸ்க்.! அதிரடியாய் நீக்கிய கூகுள்!

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget