மேலும் அறிய

PUBG India | பப்ஜி ரசிகர்களே ரெடியா? இணையத்தில் கசிந்தது ரிலீஸ் தேதி!

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு, Battlegrounds Mobile India என்ற பெயரில் புதிய வெர்ஷனாக இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்த கேம் எப்போது ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது என சில தகவல்கள் கசிந்துள்ளன

சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் முக்கியமானது பப்ஜி. பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே கொடிகட்டிப்பறந்த பப்ஜி ஒரே நாளின் காணாமல் போனது. அதன்பின் பப்ஜியின் இடத்தைப் பிடிக்க பல கேம்கள் போட்டிப்போட்டன. CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் வந்தது. ஆனால் பயனில்லை . இந்நிலையில் தான் மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது அந்நிறுவனம்.

PUBG India | பப்ஜி ரசிகர்களே ரெடியா? இணையத்தில் கசிந்தது ரிலீஸ் தேதி!

பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது . இந்த புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கியுள்ளது பப்ஜி.  Battlegrounds Mobile India என்ற பெயரில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியுள்ளது. இதுவரை ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியுள்ளது சோஷியல் மீடியா. இந்த நிலையில் "BATTLE GROUND INDIA” ஜூன் மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மொபைல் கேமிங் தொடர்புடைய சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளனர். ஜூன் 3ம் வாரம் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

>> Twitter Spaces | லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு முதல் அரசியல் வரை : வரவேற்பை பெரும் ட்விட்டர் ஸ்பேசஸ்!

எதிர்வரும் புதிய கேம், இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு என்றாலும் இந்திய எல்லையைத் தாண்டி யாருடனும் சேர்ந்து நாம் விளையாட முடியாது. முன்பு உலகளவில் யார் கூட வேண்டுமானாலும் இணைந்து விளையாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தமுறை பப்ஜி இந்தியாவுக்குள் மட்டுமே விளையாட முடியும். விளையாட்டில் எல்லை தாண்டி கூட்டணி வைக்க முடியாது எனக் கூறப்படுகிறது. 

PUBG India | பப்ஜி ரசிகர்களே ரெடியா? இணையத்தில் கசிந்தது ரிலீஸ் தேதி!

அதேபோல, பப்ஜி விளையாடுபவர்களுக்கான வயது வரம்பில் அந்நிறுவனம் கறார் காட்டுவதாக தெரிகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தானாக இன்ஸ்டால் செய்து விளையாடும் முடியும் என்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்றே விளையாடும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிகிறது. எதுவாக இருந்தால் என்ன? Battlegrounds Mobile Indiaவும் பப்ஜியை போலவே சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டுமென அதன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

>> ஸ்மார்ட் வாட்ச் யூசரா நீங்க? OnePlus ஸ்மார்ட் வாட்ச் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.. தகவல்கள் இங்கே..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget