மேலும் அறிய

Twitter Update: இவருக்கு வேற வேலையே இல்ல.. இனி அதுக்கும் ப்ளூ டிக் வேணும்.. எலான் மஸ்க் பண்ண காரியத்தை பாருங்க..!

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் வாக்களிக்க ப்ளு டிக் பயனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Twitter Update: எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் வாக்களிக்க ப்ளு டிக் பயனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து,  காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார்.

கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. 

பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதிய அப்டேட்:

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) போன்ற தளங்களில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட தலைப்பை பற்றி  தனிநபரும் மற்றும் நிறுவனங்களும் வாக்கெடுப்பு நடத்துகின்றனர். இதில் தங்களின் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இந்த வாக்கெடுப்பில் பல ஸ்பேம்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது இதனை தடுக்கும் விதமாக, எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த கருத்துக் கணிப்புகளின் வாக்கெடுப்பில் அனுமதிக்கப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். ப்ளு டிக் இல்லாத பயனாளர்கள் கருத்துக் கணிப்புகளில் வாக்களிக்க  முடியாது என்றும்  சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்துக்கணிப்புகளில் ஸ்பேம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். இருப்பினும்,  இந்த மாற்றம் எப்போது நடைமுறைக்கும் வரும் என்பது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

அண்மையில் வந்த அப்டேட்:

ட்விட்டர் தளத்தில் வீடியோ கால் வசதி  அறிமுகமாகி உள்ளது. ட்விட்டர் தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை கிளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்டா நிறுவனத்தின் பகுதியாக இருக்கக் கூடிய இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய தளங்களில் இந்த வீடியா மற்றும் ஆடியோ கால் வசதி இருக்கிறது. இந்நிலையில், அதற்கு போட்டியாக எலான் மஸ்க் போன் நம்பர் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், மைக்ரோபோனில் மியூட்ஆன் , மியூட், லவுட் ஸ்பீக்கர்,  டர்ன் ஆஃப் வீடியோ  மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget