மேலும் அறிய

Smartphone Charging Tips: உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவாக சார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Smartphone Fast Charging Tips: நெருக்கடியான சூழல்களில் வாழும் அனைவருமே தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை விரைவாக சார்ஜ் செய்ய விரும்புவதால், அவற்றிற்கான டாப் 7 டிப்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்..

உங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்ய அடிக்கடி மறக்கிறீர்களா? அப்படியென்றால்  வருத்தப்பட வேண்டாம்! பிஸியான வேலை நேரங்கள், ஆயிரக்கணக்கான சிந்தனைகள் என ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்வது முதலான குட்டி குட்டி விஷயங்களையும் நாம் மறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மேலும், காலையிலேயே பணிக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது எனப் பல்வேறு வேலைகள் இருக்கும் சூழலில், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அதன் சார்ஜ் முழுவதுமாக தீரும் அளவுக்குப் பயன்படும் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அப்படியான சூழலில், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்ய மறந்தால், பதட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம் கூட ஏற்படலாம்.

இப்படியான நெருக்கடியான சூழல்களில் வாழும் அனைவருமே தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை விரைவாக சார்ஜ் செய்ய விரும்புவதால், அவற்றிற்கான டாப் 7 டிப்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்.. இந்த டிப்ஸ்களை செயல்படுத்த உங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜர் கூட தேவையில்லை என்பது முக்கியமானது.

1. உங்கள் ஃபோனை ஏர் பிளேன் மோடில் போடவும்

உங்கள் ஃபோன் எப்போது நெட்வொர்க்குடன் தொடர்பில் இருப்பதும் உங்கள் பேட்டரி விரைவில் முடிவதற்குக் காரணமாக அமையும். உங்கள் ஃபோனை ஏர் பிளேன் மோடில் போடுவது உங்கள் பேட்டரியைச் சேமிக்க உதவும். நெட்வோர்க்கோடு இணைய முடியாவிட்டாலும், உங்களுக்குத் தேவையான செயலிகளைப் பயன்படுத்தலாம்.

Smartphone Charging Tips: உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவாக சார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

2. பவர் சேவிங் மோடைப் பயன்படுத்தவும்

பவர் சேவிங் மோடை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்துவது அதன் பின்னணியில் இயங்கும் செயலிகளைத் தடுப்பதோடு, உங்கள்  ஸ்மார்ட்ஃபோனின் ஆற்றலை மிச்சப்படுத்துவதோடு, அது சார்ஜ் செய்யப்படும் வேகத்தையும் அதிகரிக்கிறது.

3. ஸ்மார்ட்ஃபோனைப் பவர் ஆஃப் செய்யவும்

உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவில் சார்ஜ் செய்வதற்கு அது சார்ஜிங் மீது மட்டுமே கவனம் செலுத்துவது பயனுள்ளதாக அமையும். அவ்வாறு சார்ஜ் மீது மட்டுமே உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கவனம் செலுத்த அதனைப் பவர் ஆஃப் செய்ய வேண்டும்.

4. சுவரில் உள்ள ப்ளக்கில் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்யவும்

உங்கள் ஃபோனைக் கணினியிலோ, லேப்டாப்பிலோ சார்ஜ் செய்வதற்குப் பதிலாக அதனைச் சுவரில் உள்ள ப்ளக்கில் சார்ஜ் செய்வது விஉரைவாக சார்ஜ் செய்ய உதவும். கணினி, லேப்டாப் ஆகியவற்றில் உள்ள USB போர்ட்டை விட அதிகளவிலான மின் ஆற்றல் சுவரில் உள்ள ப்ளக்கில் கிடைப்பதால், ஃபோன் விரைவில் சார்ஜ் செய்யப்படுகிறது.

Smartphone Charging Tips: உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவாக சார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

5. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தக் கூடாது

உங்கள் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அதனைப் பயன்படுத்தினால், அது தனக்குக் கிடைக்கும் ஆற்றலை உங்கள் பயன்பாட்டுக்குச் செலவிடும். இது சார்ஜிங் வேகத்தைக் குறைப்பதால், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்யப்படும் போது, அதனைப் பயன்படுத்தக் கூடாது.

6. ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்களைப் பயன்படுத்தவும்

சார்ஜ் செய்யும் கேபிளின் தரமும் சார்ஜிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்களால் முடிந்தால் ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்களை விலை கொடுத்து வாங்கலாம். மேலும், பவர் பேங்க் பயன்படுத்துவது நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய உதவும்.

7. சூடான இடங்களைத் தவிர்க்கவும்

அதிக வெப்பமும், சூடான இடங்களில் ஸ்மார்ட்ஃபோனை வைப்பதும் அதன் பேட்டரி ஆயுளை விரைவில் சேதப்படுத்தலாம். எனவே உங்கள் ஸ்மார்ட்ஃபோனை வெப்பத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget