மேலும் அறிய

Instagram | இனி தொடர்ந்து 20 நிமிஷம்தான்.. இன்ஸ்டா கொண்டு வந்துள்ள அப்டேட்! யூஸ் ஆகுமா?

இன்ஸ்டாகிராமிலேயே நீங்கள் அதிக நேரம் செலவிட்டால் உங்கள் பாப் அப் முறையில் நோட்டிபிகேஷன் வரும்

உலகம் முழுவதும் அதிக பேர் மூழ்கி இருக்கும் முக்கியமான சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் பலரையும் அடிமையாக்கி உள்ளது. அந்த வகையில் பள்ளி மற்றும் இளம் பருவத்தில் இருக்கும் பலர் இந்த தளத்தில் அதிகமாக தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாக்குள் போய் ரீல்ஸ்க்குள் போய்விட்டால் அடுத்து அடுத்து என வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். 


Instagram | இனி தொடர்ந்து 20 நிமிஷம்தான்.. இன்ஸ்டா கொண்டு வந்துள்ள அப்டேட்! யூஸ் ஆகுமா?

ஆர்வத்தில் வீடியோவை பார்த்துக்கொண்டே கடிகாரத்தை பார்த்தால் திக்கென்று இருக்கும். வீடியோ ஓடுவதைப்போலவே நேரமும் ஓடி விடும். இதனைக் கட்டுப்படுத்த தற்போது இன்ஸ்டா நிறுவனமே அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமிலேயே நீங்கள் அதிக நேரம் செலவிட்டால் உங்கள் பாப் அப் முறையில் நோட்டிபிகேஷன் வரும். 10 நிமிடம், 20 நிமிடம், 30  நிமிடம் என நமக்கான நேரத்தை நாம் செலக்ட் செய்து கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்களுக்கான நினைவூட்டல் வரும். இன்ஸ்டாகிராமில் இருந்தது போதும் மற்ற வேலைகளையும் பாருங்கள் என்பது போல இந்த நினைவூட்டல் அப்டேட்டை இன்ஸ்டா கொண்டு வந்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள, இன்ஸ்டாகிராம் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புத் தலைவர் வைஷ்ணவி ஜே, 'தொடர்ந்து ஒரே டாப்பிக்கில் நீங்கள் 20 நிமிடத்துக்கு மேல் இருந்தால் உங்களை இன்ஸ்டா நினைவூட்டும். அது தேவையான ஒன்றுதான். அந்த நேரத்தில் நீங்கள் பல வேலைகளை செய்துகொண்டு இன்ஸ்டாவில் இடைவெளி விட்டு பயன்படுத்தினால் அது நீண்ட நேர பயன்பாட்டுக்குள் வராது என்றார்.


Instagram | இனி தொடர்ந்து 20 நிமிஷம்தான்.. இன்ஸ்டா கொண்டு வந்துள்ள அப்டேட்! யூஸ் ஆகுமா?

இந்த அப்டேட்டை நவம்பரில் கொண்டு முதல் சோதிக்கத் தொடங்கியுள்ளது இன்ஸ்டாகிராம். இந்த அப்டேட் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும், அப்டேட்டுக்கு பிறகு எத்தனை சதவீதம் நபர்கள் இன்ஸ்டாகிராம் தொடர் பயன்பாட்டில் இருந்து தங்களை  விடுவித்துக் கொள்கிறார்கள் என்ற விவரத்தையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. 

சமீப அப்டேட்டின்படி,  இன்ஸ்டாகிராம் இப்போது அடையாள சரிபார்ப்புக்காக வீடியோ செல்ஃபிகளைக் கேட்கத் தொடங்கியுள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பயனர் உண்மையான நபரா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள புதிய அடையாளச் சரிபார்ப்பு செயல்முறை Instagram-க்கு உதவும் என்பதை ஸ்கிரீன்ஷாட்கள் காட்டுகின்றன. உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்புவதற்கான ஒரு சிறிய வீடியோவை  கேட்கும். இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மேலும் 30 நாட்களில் நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget