Apple Event: மார்ச் 8 இல் ஆப்பிள் ஈவன்ட்.. வரிசைக்கட்டி நிற்கும் ஐ போன் எஸ் 3, ஐ பேடு ஏர், மேக்புக் ப்ரோ எம் 2.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆப்பிள் நிறுவனம் வருகிற மாதங்களில் வெளிவிடவிருக்கும் புதிய போன் மற்றும் ஐபேடு, கம்பியூட்டர்கள் என்னென்ன என்பதையும் அதன் சிறப்பம்சங்களையும் இங்கு பார்க்கலாம்.
பிரபல ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் தனது முதல் நிகழ்ச்சியை வரும் மார்ச் 8 ஆம் தேதி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற ஐ போன் எஸ் இ 3, நியூ ஐ பேடு ஏர், உள்ளிட்டவற்றுடன் சில வகையான மேக் கம்யூட்டர்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு போல இந்தாண்டும் ஆப்பிள் நிகழ்ச்சி ஆன்லைனிலேயே நடக்க இருக்கிறது.
ஐ போன் எஸ் 3
ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாக ஐ போன் எஸ் இ மாடல் போன்களை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் போன்கள் புதுபிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்போது மூன்றாவது மாடலாக ஐ போன் எஸ் 3 மாடல் போன்கள் வெளியாக இருக்கிறது. இந்தியா டுடே வெளியிட்ட தகவலின் படி, இந்த போனில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என சொல்லியிருக்கிறது.
போனின் டாப்பில் அதிகளவு பெசல் ஏரியா இருக்கும் வகையில் வரும் இந்த போனில், வழக்கமாக இடம்பெறும் ஐ போன் ஐகானிக் டச் ஐடியும் இடம்பெற்றிருக்கிறது. A15 பயோனிக் சிப்செட்டை உள்ளடக்கியிருக்கும் இந்த போனில் நீண்ட நேரம் செயலாற்றும் பேட்டரியும், 5ஜி நெட்வொர்க் வசதியும் இடம்பெற்றுள்ளதாம்.
ஐ பேடு ஏர்.
இந்த ஐ பேடு ஏர், 15 பயோனிக் சிப்செட்டுடன், 5G நெட்வொர்க் வசதியையும் உள்ளடக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ பேடு ஏரில், ஐ போன் மினியில் இடம்பெற்ற அதே அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறதாம். அதன் படி பார்த்தால், 12 எம். பி ஃப்ரண்ட் கேமாரா, Quad-LED ட்ரூ டோன் ப்ளாஷ் ஆகியவை இந்த பேடில் இடம்பெறும்.
மேக் மினி:
இந்த மேக் மினி, மேக் மினி ப்ரோ என்று அழைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதில் மேக்புக் ப்ரோவில் பொருத்தப்பட்டிருக்கும் எம் 1 ப்ரோ சிப்செட்டை விட, அதிக பவர் கொண்ட சிப்செட் பொருத்தப்பட உள்ளதாம்.
மேக்புக் ப்ரோ எம் 2:
மேக்புக் ப்ரோ எம் 2 வின் டிசைன் கடந்த வருடம்தான் புதுப்பிக்கப்பட்டதால், இந்த மேக்புக் ப்ரோ டிசைனும் அதே போல இருக்கும் என சொல்லப்படுகிறது. இதில் எம் 2 சிப்செட்டை விட பவர் ஃபுல்லான சிப்செட் பொருத்தப்பட உள்ளதாம். Mini LED டிஸ்ப்ளே இதில் இடம்பெறவில்லை.