மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

ISRO PSLV-C54: விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கை கோள்கள் என்னென்ன? முழு விபரங்கள் இதோ..!

ISRO PSLV-C54: விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட்டின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 9 செயற்கைகோள்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ISRO PSLV-C54: விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட்டின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 9 செயற்கைக்கோள்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் 9 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணை நோக்கி குறிப்பிட்ட நேரப்படி சரியாக 11.56 மணிக்கு சீறிப் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் இந்த ஆண்டில் ஏவப்படும் 5வது செயற்கைக்கோள் ஆகும். மேலும், இதுதான் இந்த ஆண்டில் செலுத்தப்படும் கடைசி ராக்கெட் இது.

ஏற்கனவே, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவும், அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வளர்சி கண்டு வருகிறது. அண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிராரம்ப்(PRARAMBH)' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் அந்த ராக்கெட்டை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று வெற்றிகரமாக பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

செயற்கைக்கோள்களின் விவரங்கள்:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடைகொண்ட, 'ஓசன்சாட்03' என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உடன் 8 நானோ செயற்கைகக்கோள்களையும்  சுமந்து செல்ல உள்ளது. அவற்றில்  அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள் மட்டும் நான்கு உள்ளன. 

அதோடு, தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் ஆனந்த் ஆகிய செயற்கைக்கோள்களை, இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதோடு, சுவிட்சார்லாந்தின் ஒரு செயற்கைக்கோளும் புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்த அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தியா-பூடான் செயற்கைக்கோள்  

ISRO நானோ செயற்கைக்கோள்-2 (INS-2B) விண்கலம் INS-2 உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. INS-2B ஆனது நானோஎம்எக்ஸ் மற்றும் ஏபிஆர்எஸ்-டிஜிபீட்டர் என இரண்டு பேலோடுகளைக் கொண்டிருக்கும். நானோஎம்எக்ஸ் என்பது ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டரால் (எஸ்ஏசி) உருவாக்கப்பட்ட மல்டிஸ்பெக்ட்ரல் ஆப்டிகல் இமேஜிங் பேலோட் ஆகும். APRS-டிஜிபீட்டர் பேலோடை DITTPhutan (பூடான்) மற்றும் URSC இணைந்து உருவாக்கியது.

ஆஸ்ட்ரோகாஸ்ட் - 2

ஆஸ்ட்ரோகாஸ்ட், ஒரு 3U  என்பது இணையத்தின் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் செயற்கைக்கோள். இது முற்றிலும் அமெரிக்க நாட்டின் செயற்கை கோள்கள் ஆகும்.  இவை ஐஎஸ்ஐஎஸ்பேஸ் குவாட்பேக் டிஸ்பென்சரில் வைக்கப்பட்டுள்ளன. டிஸ்பென்சர் செயற்கைக்கோளை சேதாரம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

தைபோல்ட் 1, 2

தைபோல்ட் என்பது 0.5U விண்கலமாகும், இது ராக்கெட்டின் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் பணி என்பது, விஞ்ஞானிகள் அனுப்பும் தகவல் சரியாகப் போய்ச் சேரவில்லை என்றாலும் கூட தானாகவே தனது செயல்பாடுகளை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துருவ் ஸ்பேஸ் ஆர்பிட்டலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டிப்ளோயரைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்கள் குறைந்தபட்சம் 1 வருடம் இந்த செயற்கைக்கோள் தனது பணியை சிறப்பாகச் செய்யும். 

ஆனந்த்

ஆனந்த் நானோ செயற்கைக்கோள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் உள்ள மைக்ரோசாட்லைட்டைப் பயன்படுத்தி பூமியைக் கண்காணிப்பதற்காக  வடிவமைக்கப்பட்டதாகும்.  டெலிமெட்ரி, டெலி-கமாண்ட், எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம், ஆட்டிட்யூட் டிடர்மினேஷன் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏடிசிஎஸ்), ஆன்-போர்டு கம்ப்யூட்டர்கள், மற்றும் பேலோட் யூனிட் போன்ற அனைத்து துணை அமைப்புகளுக்கும் இடமளிக்கும் சாட்பஸ் ஆகிவை இந்த செயற்கைக்கோளில் இடம்பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget