மேலும் அறிய

Rare Merger of 3 Supermassive Black Holes: மூன்று மிகப் பெரிய கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய சம்பவம் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை

ஒரு ஈர்ப்புப் பொருள் (உதாரணமாக, சூரியன்) ஈர்ப்பின் விளைவாகத் தானே வீழ்ச்சியடைவதால் கருந்துளை உருவாகுகிறது.

மூன்று பால்வெளிகளில் இருந்து, மூன்று மிகப் பெரிய கருந்துளைகள் (Super Massive Blackhole) ஒன்றிணைந்து, மூன்று மடங்கு தீவிரமான விண்மீன் மையப் பகுதியை- ( triple active galactic nucleus) உருவாக்கியுள்ளன என்பதை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

Rare Merger of 3 Supermassive Black Holes: மூன்று மிகப் பெரிய கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய சம்பவம் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை
கருந்துளை வகைகள் 

கருந்துளை (Black Hole) என்றால் என்ன? 

விண்மீன், கோள்கள் போன்ற விண்பொருள் தான் கருந்துளை. விண்பொருளின் நிறை (Mass) அதிகமாக இருந்தால் அதன் ஈர்ப்புவிசையும் அதிகமாக இருக்கும். அதாவது, குறிப்பிட்ட காலங்களில் ஒரு ஈர்ப்புப் பொருள் (உதாரணமாக, சூரியன்) ஈர்ப்பின் விளைவாகத் தானே வீழ்ச்சியடைத் தொடங்குகிறது. இவ்வாறு, சுருங்கி வரும் பொருளின் ஆரம்(Radius) சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திற்குள் (Schwarzschild radius) வரும்போது ஈர்ப்பினால் மிக வலிமையாக வீழ்ச்சி பெறப்பட்டுக் கருந்துளையாக மாறிவிடுகிறது. அதாவது, சூரியன் போன்ற விண் பொருளின் வீழ்ச்சிதான் கருந்துளையாக மாறுகிறது. 

தனது எல்லைக்குள் (Event Horizon) வரும் அனைத்து பொருள்களையும் கருந்துளை ஈர்த்து கொள்வதால், நம்மால் நேரடியாக கருந்துளையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், கருந்துளைக்குள் சென்ற ஒளிகூட வெளியே வரமுடியாது.       

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரளின் மையப்பகுதி வழக்கத்தை விட பிரகாசமான பகுதியாக காணப்படுகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்தது.   

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நமது அருகில் உள்ள பிரபஞ்சத்தில் ஏற்பட்டுள்ள, இந்த அரிய நிகழ்வு, சிறியளவிலான  ஒன்றிணையும் விண்மீன் திரள் குழுக்கள் பல மடங்கு அதிசயமான கருந்துளைகளைக் கண்டறிய சிறந்த ஆய்வகங்களாக இருப்பதைக் குறிக்கிறது. இதுபோன்ற அரிய நிகழ்வுகளைக் கண்டறியும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, விண்மீன் பரிணாமத்தை பாதிக்கும் ஒரு முக்கிய காரணி விண்மீன்  திரள்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகும். இது விண்மீன் திரள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக நகர்ந்து ஒன்றுக்கொன்று  மிகப்பெரிய ஈர்ப்பு சக்திகளை செலுத்தும்போது நிகழ்கின்றன" என்று தெரிவித்தது.  

இது போன்ற விண்மீன் திரள்கள் தொடர்பின்போது, மிகப் பெரிய கருந்துளைகள்  ஒன்றுக்கொன்று அருகருகே வரலாம். இந்த இரட்டை கருந்துளைகள், தங்கள் சுற்றுப்புறத்திலிருந்து வாயுக்களை உட்கொள்ள தொடங்கி, தீவிர விண்மீன் திரள் மையப் பகுதியாகின்றன.

இரண்டு விண்மீன் திரள்கள் மோதினால், அவற்றின் இயக்க ஆற்றல், சுற்றியுள்ள வாயுவுக்கு மாறுவதன் மூலம் அவற்றின் கருந்துளையும் நெருங்கி வரும் என்று இந்திய வான்இயற்பியல் மைய(IIA) குழு விளக்குகிறது. அப்போது இரு கருந்துளைகளுக்கு இடையேயான தூரம் குறைந்து, இயக்க ஆற்றலை மேலும் இழக்கமுடியாமல், ஒன்றாக இணையும்.  இது விண்ணியல் ஆரம்ப பிரச்சினை என அறியப்படுகிறது.  மூன்றாவது கருந்துளை இப்பிரச்சினையை சரிசெய்யும். இணையும் இரு கருந்துளைகள், தங்கள் ஆற்றலை மூன்றாவது கருந்துளைக்கு மாற்றி ஒன்றுடன் ஒன்று இணையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget