மேலும் அறிய

Ola Scooter | ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம்; ரூ.499 செலுத்தினால் விற்பனையின்போது முன்னுரிமை..!

18 நிமிடம் சார்ஜ் செய்தால் 75 கிமீ ஓடக்கூடிய Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இன்று துவங்கியது.

மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஓலா ஸ்கூட்டரை வெறும் ரூ.499 செலுத்தி இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் இவர்களுக்கு விற்பனையின்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாக  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் சைக்கிள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக மக்கள் மாறும் நிலை ஏற்பட்டுவிடும் போலும். இதன் காரணமாக  எலெக்ட்ரிக் கார் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தான், இந்தியாவில் வாடகை கார் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக ஓலா விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கவுள்ளது. குறிப்பாக இந்த ஓலா ஸ்கூட்டர் ஜெர்மன் டிசைன் விருது உள்பட சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. எனவே புதிது புதிதாக பல ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வந்தாலும் ஓலா ஸ்கூட்டர் எப்பொழுது வரும் என மக்கள் அதிகளவில் காத்துள்ளனர். இந்நிலையில்தான் இந்த ஒலா ஸ்கூட்டருக்கான முன்பதிவினை ரூ.499 செலுத்தி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ola Scooter | ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம்; ரூ.499 செலுத்தினால் விற்பனையின்போது முன்னுரிமை..!

இந்நேரத்தில் இந்த ஸ்கூட்டரில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என அறிந்து கொள்வோம். 11544Wh பேட்டரியை 50 சதவீதம் சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் போதுமானதாக உள்ளது. இதில் 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், இதன் மூலம் 100முதல் 150 கிமீ தூரம் வரைப் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.  மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் அளவில் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் செயலி சார்ந்து இயங்கும் கீ லெஸ் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் வசதிகள் அமையவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ola Scooter | ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம்; ரூ.499 செலுத்தினால் விற்பனையின்போது முன்னுரிமை..!

ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முதல் அலகு தயாராகிவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது அடுத்த ஆண்டின் இறுதியில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பதுதான் அதன் இலக்காக உள்ளது எனவும் இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் தனது இணையதளப் பக்கத்தில் முன்பதிவை தொடங்கிவிட்டது ஓலா. எனவே இன்று முதல் ரூ.499 ரூபாய் கொடுத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், விற்பனைக்கு வரும்பொழுது முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புடன் வரக்கூடிய இந்த ஓலா ஸ்கூட்டர் மிகப்பெரிய  புரட்சியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget