மேலும் அறிய

வெளியானது ஐபோன் 14 வெளியீட்டு தேதி ! - ஊழியர்களுக்கு அலர்ட் கொடுத்த ஆப்பிள் நிறுவனம் !

ஐபோன் 14 ஆனது $100 விலை உயர்வுடன் வரும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 க்கு இடையில் விலை மாற்றங்கள் எதுவும் இல்லை, ஆனால்..

பிரபல ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தனது புதிய தொழில்நுட்ப படைப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் புதிய மாடல்களையும் அதே நாளில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐபோன் 13 வெளியான நிலையில் , இந்த ஆண்டு ஐபோன் 14 வெளியாகவுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் ஆப்பிள் தனது ஈவெண்டை யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்தது. அதே போல இந்த ஆண்டு நிகழ்ச்சியையும் ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிட்டுருப்பதாக தெரிகிறது. முன்னதாக  Apple இன் iPhone 13 நிகழ்வு செப். 14, 2021 செவ்வாய் அன்று நடைபெற்றது, மேலும் ஃபோன்கள் செப்டம்பர் 24, வெள்ளியன்று விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


வெளியானது ஐபோன் 14 வெளியீட்டு தேதி ! - ஊழியர்களுக்கு அலர்ட் கொடுத்த ஆப்பிள் நிறுவனம் !
எதிர்பார்ப்புகள் :

நிகழ்ச்சியின் பொழுது பேஸிக் ஐபோன் 14 மாடல் மொபைல்போன் , புதிய மற்றும் பெரிய திரைக்கொண்ட ஐபோன் 14 மாடல் மொபைல்போன் ,ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என்னும் விதங்களில் அறிமுகமாகவுள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.ப்ரோ ஃபோன்கள் சில ஃப்ளாஷியர் மேம்பாடுகளைப் பெறலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் அந்த மாடல் மொபைல்போன்கள்  pill-shaped hole-punch cutout ஐ கொண்டுள்ளன.ஐபோன் 14 ஆனது $100 விலை உயர்வுடன் வரும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 க்கு இடையில் விலை மாற்றங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஆப்பிளின் வினியோக சங்கிலியில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதால்தான் இந்த விலை உயர்வு என கூறப்படுகிறது. இது தவிர இவ்வகை மாடல்கள் அடுத்த தலைமுறை ஏ-சீரிஸ் செயலியைக் கொண்டுள்ளதாக தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. மொபைல்போன்கள் தவிர ஆப்பிள் தனது புதிய வாட்ச் மாடல்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது.higher-end rugged model SE ஸ்மார்ட் ஆப்பிள் வாட்ச் இந்த நிகழ்வின் பொழுது அறிமுகமாகும். முன்னதாக ஆப்பிள் தனது வொயர்லெஸ் தொழில்நுட்ப ஏர்பட்ஸின் அடுத்த தலைமுறையில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் , வரவிருக்கும் அறிமுக நிகழ்ச்சியில் அதுவும் வெளியாகலாம். இது தவிர ஐபேட் , மேக் கணினி உள்ளிட்ட அதன் அனைத்து முக்கிய பிராண்டுகளின் புதிய படைப்புகளும் வெளியாகும்


வெளியானது ஐபோன் 14 வெளியீட்டு தேதி ! - ஊழியர்களுக்கு அலர்ட் கொடுத்த ஆப்பிள் நிறுவனம் !
எப்போது விற்பனைக்கு வரவுள்ளது:

பிரபல டெக் ஊடகமான  Bloomberg இன் அறிக்கையின் படி , ஆப்பிள் ஈவெண்ட்டானது செப்டம்பர் மாதம் துவக்கத்தில் , அதாவது செப்டம்பர் மாதம் 7  (புதன்கிழமை ) ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதே சமயம் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஐபோன் 14 மாடல்கள் , ஸ்மார்ட் வாட்சஸ் , ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகள் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ) விற்பனை செய்யவுள்ளதாகவும் , இதற்கான முன் அறிவிப்பை  ஆப்பிள் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
iPhone-க்கு செக் வைக்கும் விவோ! 4K 240fps கேமராவுடன் X500 சீரிஸ் – செப்டம்பர் 21ல் அறிமுகம்!
iPhone-க்கு செக் வைக்கும் விவோ! 4K 240fps கேமராவுடன் X500 சீரிஸ் – செப்டம்பர் 21ல் அறிமுகம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahindras Diesel SUV: மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
Embed widget