Tokyo Olympics: ஆடவர் 400 மீட்டர் ரிலே : புதிய ஆசிய சாதனை படைத்த இந்திய அணி !
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகளில் ஆடவருக்கான 4*400 மீட்டர் ரிலே முதல் சுற்றில் இந்திய அணி பங்கேற்றது.
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகளில் ஆடவருக்கான 4*400 மீட்டர் ரிலேவின் முதல் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ், நிர்மல், அமோஜ் ஜேக்கப் ஆகிய நான்கு பேரும் பங்கேற்றனர். இவர்கள் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் ஓடினர். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவார்கள். அதன்பின்னர் மீதம் உள்ளவர்களில் சிறந்த நேரத்தை வைத்துள்ள இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அந்தவகையில் இரண்டாவது ஹீட்ஸில் ஓடிய இந்திய அணியினர் பந்தைய தூரத்தை 3.00.25 நிமிடங்களில் கடந்து புதிய ஆசிய சாதனையை படைத்தனர். இந்திய அணி தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் நான்காவது இடத்தை பிடித்தது. எனினும் மொத்தமாக 8ஆவது இடத்திற்கு மேலாக பிடித்ததன் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறு வாய்ப்பை இழந்தனர்.
News Flash: This is UNBELIEVABLE 🔥🔥🔥
— India_AllSports (@India_AllSports) August 6, 2021
India create NEW ASIAN Record in Men's 4X400m Relay (Heat 2) clocking 3:00.25. Finished 4th in Heat 2
Indian team comprised Muhammed Anas, Nirma Noah Arokia Rajiv, Amoj Jacob #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/S3lkSTvZ87
முன்னதாக முதல் நாளில் 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார்.பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பந்தைய தூரத்தை 50.77 நேரத்தில் கடந்து 7ஆவது இடத்தை பிடித்தார். தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற 4*400 மீட்டர் லப்பு ரிலேவில் இந்திய அணி தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேபோல் வட்டு எறிதலில் குரூப் ஏ பிரிவில் சீமா புனியா பங்கேற்றார். அவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 60.57 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் மூன்றாவது வாய்ப்பில் 58.93 மீட்டர் தூரம் வீசினார். இதனால் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சீமா புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். தற்போது தடகளத்தில் இந்தியா சார்பில் இறுதிப் போட்டியில் உள்ள ஒரே நபராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் நாளை நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளார். அந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
மேலும் படிக்க: அரையிறுதியில் உலக சாம்பியனிடம் பஜ்ரங் புனியா தோல்வி ; வெண்கலப் பதக்கத்திற்கு வாய்ப்பு