Tokyo Olympic: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை மணிஷ் கௌசிக் முதல் சுற்றில் தோல்வி !
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கௌசிக் பங்கேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் நேற்று விகாஸ் கிருஷ்ணன் ஜப்பான் நாட்டு வீரரிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கௌசிக் பிரிட்டன் வீரர் லூக்கை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் மணிஷ் கௌசிக் மற்றும் லூக் ஆகிய இருவரும் சிறப்பாக மாறி மாறி குத்து கொண்டனர். சற்று வேகமாகவும் முதல் சுற்று சென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் இருவரும் சலைக்காமல் சண்டை செய்தனர். இதன் காரணமாக மூன்றாவது மற்றும் கடைசி சுற்று மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. அதில் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மணிஷ் கௌசிக் சிறப்பாக செயல்பட்டார். எனினும் பிரிட்டன் வீரர் இறுதியில் சிறப்பாக சண்டை செய்து 4-1 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றார். இதன்மூலம் முதல் சுற்றில் தோல்வி அடைந்து மணிஷ் கௌசிக் வெளியேறினார்.
Boxing:
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
Manish Kaushik crashes OUT in 1st round (63kg); loses to Luke McCormack 1:4 in 1st round. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/Wdv22Cb696
முன்னதாக இன்று மதியம் நடைபெற்ற 51 கிலோ எடைப்பிரிவில் இவர் டொமினிக்கன் குடியரசு நாட்டின் ஹெர்னாண்ட்ஸ் கார்சியாவை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார். 38 வயதான இந்திய நட்சத்திரம் மேரி கோம் தன்னைவிட 15 வயது குறைவான வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் வெற்றிப் பெற்று அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. ஆடவர் பிரிவில் இதுவரை விகாஸ் கிருஷ்ணன், மணிஷ் கௌசிக் ஆகிய இருவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர். இன்னும் ஆஷிஷ் குமார், அமித் பங்கால், சதீஷ் குமார் ஆகிய மூவரும் தங்களுடைய முதல் சுற்றில் விளையாட உள்ளனர். அதேபோல் மகளிர் பிரிவில் பூஜா ராணி, சிம்ரன்ஜீத் கவுர், லோவ்லினா ஆகியோரும் தங்களுடைய முதல் சுற்றில் களமிறங்க உள்ளனர். இவர்களின் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறு நாள் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் மனிகா பட்ரா வெற்றி..!