Tokyo olympics: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கிச்சுடுதலில் மனு பாக்கர்-சவுரப் சௌதரி ஏமாற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கிச் சுடுதலில் மனுபாக்கர்-சவுரப் சௌதரி மற்றும் யாஷஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வெர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆகிய இரண்டு பிரிவிலும் கலப்பு போட்டி இன்று நடைபெற உள்ளன. கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலை பொறுத்தவரை இரண்டு தகுதிச் சுற்றுகள் நடைபெறும். முதல் தகுதிச் சுற்றில் இருந்து 8 அணிகள் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் 3ஆவது மற்றும் 4ஆவது அணிகள் வெண்கலப்பதக்கத்திற்கும், முதலாவது மற்றும் இரண்டாவது அணிகள் தங்கப்பதக்கத்திற்கும் போட்டியிடுவார்கள். தங்கம் மற்றும் வெண்கலப்பதக்க போட்டிகளில் முதலில் 16 புள்ளிகளை பெறும் அணி வெற்றி பெறும்.
இந்நிலையில் முதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிகளுக்கான கலப்பு பிரிவு முதல் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மனுபாக்கர்-சவுரப் சௌதரி மற்றும் யாஷஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வெர்மா ஆகியோர் பங்கேற்றனர். அதில் மனுபாக்கர்-சவுரப் சௌதரி இணை 582 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. மற்றொரு இந்திய இணையான யாஷஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வெர்மா 564 புள்ளிகள் பெற்று17 இடத்தைப் பிடித்தது. மனு பாக்கர்-சவுரப் சௌதரி இணை இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 8 இடங்களுக்குள் வராததால் அபிஷேக் வெர்மா-யாஷஸ்வினி தேஸ்வால் இணை வெளியேறியது.
Heartbreak folks 💔
— India_AllSports (@India_AllSports) July 27, 2021
Manu Bhaker & Saurabh Chaudhary missed OUT qualifying for medal rounds of Mixed Team event.
The duo finished 7th in 2nd stage (out of 8 shooters) with 380 points
Abhishek & Yashswini Deswal were already eliminated in Stage 1 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/S1CZ09M2EC
இதனைத் தொடர்ந்து நடைபேற்ற இரண்டவது தகுதிச் சுற்றில் மனு பாக்கர்-சவுரப் சௌதரி 380 புள்ளிகள் பெற்று 7ஆவது இடத்தை பிடித்தனர். இதனால் வெண்கலப்பதக்கம் மற்றும் தங்கப்பதக்கம் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர். துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு மீண்டும் ஏமாற்றம் தொடர்ந்துள்ளது.
முன்னதாக மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் யாஷஸ்வினி தேஷ்வாய் ஆகிய இருவரும் தகுதிச் சுற்றில் 11ஆவது மற்றும் 12ஆவது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தனர். அதேபோல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகிய இருவரும் தகுதிச் சுற்றுடன் வெளியேறினர்.
அதேபோல ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா சார்பில் சவுரப் சௌதரி மற்றும் அபிஷேக் வெர்மா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களில் அபிஷேக் வெர்மா தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சவுரப் சௌதரி தகுதிச்சுற்றில் முதல் இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். எனினும் இறுதிப் போட்டியில் 7ஆம் இடம் பிடித்து அவரும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவிலும் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் மற்றும் தீபக் குமார் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஒலிம்பிக் இந்திய அணிக்கு ‛சியர்’ செய்யும் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள்!