India Schedule, Tokyo Olympic 2020:ஆடவர் ஹாக்கி அணி, அடானு தாஸ், பி.வி.சிந்து, மேரி கோம் நாளை களமிறங்கும் லிஸ்ட்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 29.07.2021 களமிறங்கும் இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆறாவது நாளான இன்று வில்வித்தையில் மகளிர் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். இவை தவிர மற்ற முடிவுகள் எதுவுமே இந்தியாவிற்கு சாதகமாக அமையவில்லை.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர் தெரியுமா?
ஆடவர் ஹாக்கி: இந்தியா vs அர்ஜென்டினா (காலை 6.00 மணி)
வில்வித்தை: அடானு தாஸ் vs செங்(சீன தைபே)(காலை 6.31 மணி)
குத்துச்சண்டை: 91+ கிலோ பிரிவு: சதீஷ் குமார் vs ரிகார்டோ(ஜமைக்கா)(காலை 7.45 மணி)
51 கிலோ மகளிர் பிரிவு: மேரி கோம் vs விக்டோரியா வெலன்சியா(கோலம்பியா)(மதியம் 3.40)
பேட்மிண்டன்: பி.வி.சிந்து vs மியா பிளிச் ஃபெல்டிட்(டென்மார்க்) (காலை 6.15 மணி)
துப்பாக்கிச் சுடுதல்: மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்று: மனு பாக்கர், ராஹி சர்னோபட் (காலை 5.30 மணி)
கோல்ஃப்: அனிர்பன் லஹரி (காலை 8.50 மணி)
குதிரை ஏற்றம்: ஃபவாத் மிஸ்ரா (காலை 6 மணி)
நீச்சல்: சஜன் பிரகாஷ் 100 மீட்டர் பட்டர்ஃபிளை (மாலை 4.16 மணி)
ஆடவர் ஹாக்கி அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெரும்பட்சத்தில் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். மகளிர் குத்துச்சண்டையில் மேரி கோம் நாளை தனது இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளார். அதில் வெற்றி பெற்றால் அவரும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார். அதேபோல ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் பிரிவில் சதீஷ் குமார் இரண்டாவது சுற்றில் களமிறங்குகிறார். அவரும் வெற்றிப் பெற்றால் காலிறுதிச் சுற்றுக்கு செல்வார்.
மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனையை எதிர்த்து நாளை விளையாட உள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. துப்பாக்கிச்சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பிரிசிஷன் ரக தகுதிச் சுற்று நாளை நடைபெறுகிறது.25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நாளை மறுநாள் ரெபிட் ரக தகுதிச் சுற்று நடைபெறும். நாளை இந்தியாவிற்கு எந்த ஒரு பதக்கம் வெல்லும் விளையாட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜூடோ வீராங்கனை கன்னத்தில் அறைந்த கோச்: எதற்கு தெரியுமா?