Paris Olympics 2024: மகளிர் மல்யுத்தம்; காலிறுதியில் ரித்திகா தோல்வி.. ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. அந்தவகையில் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்றனர். அதே நேரம் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசலே, ஹாக்கி இந்தியா, நீரஜ் சோப்ரா மற்றும் அமன் ஆகியோர் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்துள்ளனர்.
மகளிர் மல்யுத்தம்:
இச்சூழலில் தான் இன்று (ஆகஸ்ட் 10) நடைபெற்ற மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா களம் இறங்கினார். அதன்படி முதல் சுற்றில் 12-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் கலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். கால் இறுதி சுற்றில் ஐபெரி கைஸியை எதிர்கொண்டார்.
However all is not lost!
— India_AllSports (@India_AllSports) August 10, 2024
Reetika can still be in contention for a Bronze medal via Repechage 🤞 https://t.co/q64kMCyNz3
இதில் 1-1 என்ற கணக்கில் போட்டியை சமன் செய்தார். அதே நேரம் ஏற்கனவே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதால் ஐபெரி கைஸி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.