Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் - இந்திய பதக்க வாய்ப்பை பறிக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் - டாப் 5 போட்டிகள் இதோ..!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாட்டு வீரர்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ள, 5 போட்டிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் 2024:
கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், 7 பதக்கங்களை வென்ற இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் புதிய உச்சத்தை தொடட்டது. அதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ராவின் வரலாற்று தங்கப் பதக்கமும் அடங்கும். இந்த சூழலில், நடப்பாண்டு ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்கங்களில் பதங்களை வெல்வதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், தேசத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய பல நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடிய சில வீரர்களும்/ அணிகளும் களத்தில் உள்ளன. அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கு சவால் அளிக்கும் தனிநபர்கள்/அணிகள்:
1. நீரஜ் சோப்ரா Vs ஆஷாத் நதீம்:
தங்கப் பதக்கம் வென்ற வீரரான நிரஜ் சோப்ரா, ஒட்டுமொத்த இந்தியாவின் பெரும் மற்றும் முதன்மையான நம்பிக்கையாக உள்ளார். ஈட்டி எறிதல் பிரிவில் அண்மையில் நடந்த அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் பதக்கங்களை குவித்துள்ளார். இவர் டிராக் & ஃபீல்ட் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் மட்டுமல்ல, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அடுத்தடுத்து தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
அதேநேரம், பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் மற்றும் ஜக்குப் வட்லெஜ் போன்றவர்கள், ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கு கடும் நெருக்கடி தரக்கூடும். Jakub Vadlejch டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் வெள்ளி வென்றார். அதோடு, கடந்த 10 ஆண்டுகளில் உலகம் கண்ட மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவரகாவும் கருதப்படுகிறார்.
2. ஹாக்கியில் இந்தியா Vs ஆஸ்திரேலியா:
ஆடவர் அணியாக இருந்தாலும், பெண்கள் அணியாக இருந்தாலும், ஹாக்கியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறுவது இந்தியாவுக்கு எப்போதும் கடினமாகவே உள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, கிரேட் பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதேசமயம், இறுதி மேடையில் ஒரு இடத்தைப் பிடிக்க இந்தியா பெரிதும் போராடுகிறது, மேலும் ஒரு சிறந்த அணி கட்டமைக்கப்பட்டாலும் கூட, ஆஸ்திரேலிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்திய தாடுமாறியே வருகிறது.
3. பிவி சிந்து Vs சென் யூ ஃபீ
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து மற்றும் சென் யூ ஃபீ ஆகியோர் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. பேட்மிண்டன் ஜாம்பவானான சிந்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஹாட்ரிக் பதக்கங்களை நிறைவு செய்த முதல் இந்திய வீராங்கனையாக (2016 இல் வெள்ளி வென்றதால், மற்றும் 2020 இல் வெண்கலம்) என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சீனாசென் யூ ஃபீ பிவி சிந்துவின் பரம எதிரியாக கருதப்படுகிறார். கடந்த காலங்களில் இருவரும் பலமுறை மோதியுள்ளனர். கடைசியாக இருவரும் மோதிய 2024ம் ஆண்டிற்கான பிரெஞ்ச் ஓபனில் சிந்து வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
4. மீராபாய் சானு Vs ஹௌ ஜிஹுய்:
டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்த முறை தங்கப் பதக்கத்திற்கான முக்கிய போட்டியாளராக உள்ளார். இருப்பினும், அவருக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் சீனாவின் லெஜண்ட் ஹௌ ஜிஹுய் இருக்கிறார். பளுதூக்குதல் என்று வரும்போது எல்லா காலத்திற்கும் சிறந்த வீராங்கனையாக கருதப்படும் இவர், தனது பெயரில் பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அதுவும் அவர் ஒரு நல்ல ஓட்டத்தை பிடித்தால், அவரது வெற்றி வாய்ப்பை பறிக்கும் போட்டியாளர் என யாருமே இல்லை என்பதே களநிலவரம்.
5. சாத்விக் & சிராக் ஷெட்டி Vs லியாங் வெய்கெங் & வாங் சாங்:
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் கடந்த 24 மாதங்களாக பேட்மிண்டனில் தங்களது வெற்றிகளால் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல சாம்பியன்ஷிப் மற்றும் போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இருவரும் அசத்தி வருகின்றனர். அண்மையில் தாய்லாந்து ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
இருப்பினும், அவர்களுக்கு எதிராக இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள லியாங் வெய்கெங் மற்றும் வாங் சாங் ஜோடி களமிறங்குகிறது. ஏற்கனவே, இந்த சீன ஜோடி இந்திய ஜோடிக்கு எதிராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, சீன ஜோடியை ஒரே ஒரு முறை மட்டுமே வீழ்த்தியுள்ளனர்.