Paralympics 2024: பாரிசில் நாளை தொடங்குகிறது பாராலிம்பிக் திருவிழா! எப்படி பார்ப்பது? எத்தனை நாடுகள் பங்கேற்பு?
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகள் நாளை பாரிசில் தொடங்குகிறது. இதனால் வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்ற சில தினங்களிலே பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குவது வழக்கம். ஒலிம்பிக போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை பாரிசில் தொடங்குகிறது.
கடந்த பாராலிம்பிக்கில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தினர். இதனால், இந்தியா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாராலிம்பிக் தொடங்குவது எப்போது? என்ன நேரம்?
மாற்றுத் திறனாளிகளின் பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது. பாரிசில் உள்ள டி லே கான்கோர்டேவில் தொடக்கவிழா நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக பங்கேற்க இருக்கின்றனர். பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வெளியே தொடக்க விழா நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும்.
பாரலிம்பிக் போட்டிகளை பார்ப்பது எப்படி?
பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.
பாராலிம்பிக் போட்டிகள் எத்தனை நாட்கள் நடக்கிறது?
பாராலிம்பிக் போட்டிகள் மொத்தம் 11 நாட்கள் நடக்கிறது.
எத்தனை நாடுகள் பங்கேற்கிறது?
இந்த பாராலிம்பிக் தொடரில் மொத்தம் 180 நாடுகள் பங்கேற்கின்றது.
பாராலிம்பிக் 2024ல் புதிய போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதா?
பாரலிம்பிக் 2024ல் புதியதாக எந்த போட்டிகளும் சேர்க்கப்படவில்லை. 2016ம் ஆண்டு பாரா கேனோவ் மற்றும் பாரா ட்ரையத்லான் போட்டிகளும், 2020ம் ஆண்டு பாரா பேட்மிண்டன் மற்றும் பாரா டேக்வோண்டாவும் சேர்க்கப்பட்டது.
எத்தனை வீரர்கள் பங்கேற்பு?
பாராலிம்பிக 2024ல் மொத்தம் 180 நாடுகளில் உள்ள 4 ஆயிரத்து 400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.