தலை நிமிர்ந்து நடங்கள் போராளி - வினேஷ் போகத்துக்கு ஆதரவாக நயன் தாரா, ஆலியா பட்!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஆதரவாக திரையுலக நடிகைகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஆதரவாக திரையுலக நடிகைகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். இதனால் நாடே அவரை தூக்கி வைத்து கொண்டாடியது. ஆனால் பிரதமர் மோடி தரப்பிலோ பாஜக தரப்பிலோ எந்த பாராட்டும் புகழும் வரவில்லை. ஒருவேளை இறுதிப் போட்டியில் தங்கம் வென்றால் ஒரேடியாக புகழ்ந்து கொள்ளலாம் என இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பிரதமர் மோடி குறித்து விமர்சித்திருந்தார். இப்போது வினேஷ் போகத் மீண்டும் இந்தியாவின் மகளாவார் எனவும் அந்த போனுக்காக வெயிட் பன்றேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி வந்தது. யாரும் எதிர்பாராதவிதமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. 100 கிராம் எடை அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்தது. அவர்களுக்கே அப்படி என்றால் போகத்துக்கு எப்படி இருக்கும்.
View this post on Instagram
அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வினேஷ் தகுதி நீக்கம் குறித்து இந்திய அணியின் தலைமை மருத்துவர் கூறுகையில், “சில நேரங்களில் போட்டிக்கு பிறகு அதிகரிக்கும் எடை, வழக்கத்தை விட வினேஷ் போகத்துக்கு அதிகமாக இருந்தது. வினேஷ் போகத் ஒரே நாளில் 3 போட்டிகளில் விளையாடிய நிலையில் இரவில் எடை அதிகரித்ததை கண்டறிந்தோம்” என குறிப்பிட்டார்.
இதையடுத்து வினேஷ் போகத் ”இனி என்னால் போராட முடியவில்லை. குட் பை மல்யுத்தம்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள் வினேஷ். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை. எந்த சாதனையையும் மிஞ்சும் ஆழமான அன்பை நீங்கள் பெரிய பரிசாகப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் தலை நிமிர்ந்து நடங்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பாலிவுட் நடிகை ஆலியாபட் “ ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகம் நீங்கள். உங்கள் துணிச்சலையும் தைரியத்தையும் யாராலும் பறித்துவிட முடியாது. நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் யாராலும் அகற்ற முடியாது. மனம் உடைந்திருப்பீர்கள். உங்களுடன் நாங்களும். ஆனால் நீங்கள் தங்கம். இரும்பு. சாம்பியன். உங்களை போல யாரும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.