Messi New Contract: 50% சம்பள பிடிப்புடன் பார்சிலோனா அணிக்காக விளையாட இருக்கும் மெஸ்ஸி

பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மெஸ்ஸி, அந்த அணியுடனான தனது 18 வருட உறவை கடந்த மாதம் முடித்து கொண்டார்

Continues below advertisement

ஆறு முறை பாலன் டி ஓர் விருது வென்ற மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்கு தொடர்ந்து விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மெஸ்ஸி, அந்த அணியுடனான தனது 18 வருட உறவை கடந்த மாதம் முடித்து கொண்டார். பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Lionel Messi | மெஸ்ஸியும் சர்வதேச கோப்பையும் : நிறைவேறிய நீண்ட நாள் கனவு !

இதனால், வேறொரு புதிய அணியில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இப்போது பார்சிலோனா அணியில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்சிலோனா அணியில் இப்போது போதுமான தொகை இன்றி இருப்பதால்,  50% சம்பள பிடித்தம் என்ற விதிமுறையை ஏற்றுக்கொண்டு மெஸ்ஸி இதே அணியில் இருக்க முடிவெடுத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, தன்னுடைய 13 வயதிலிருந்து கால்பந்து விளையாட்டில் இருக்கும் மெஸ்ஸிக்கு அர்ஜென்டினா அணிக்காக ஒரு சர்வதேச கோப்பையை வெல்ல வேண்டும் என்று நீண்ட நாள் கனவு ஒன்று இருந்தது. அந்த கனவு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு நிறைவேறாமல் இருந்தது. லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக 10 முறை அவர் கோப்பை வென்றுள்ளார். 

எனினும் தன்னுடைய சொந்த நாடான அர்ஜென்டினாவிற்கு ஒரு முறை கூட கோப்பை வெல்லவே முடியாமல் இருந்தார். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோவில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக களமிறங்கினார். அப்போது ஜெர்மனி அணியிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்தது. இந்த சோகம் அவருக்கு எப்போதும் ஆறாத துயரமாக அமைந்தது.  

இந்த சூழலில், இந்தாண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அர்ஜென்டினா அணிக்காக அவர் வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் : முதல் முறையாக இந்திய நடுவர் தேர்வு !

Continues below advertisement
Sponsored Links by Taboola