தொடர்ந்து சொதப்பல்: அதிருப்தியில் ரசிகர்கள்... விடாப்பிடியாய் சிஎஸ்கே! உறுதி அளித்த ருதுராஜ்..!
கெய்க்வாட்டின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணி சொதப்பி வரும் நிலையில், அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம் என்று அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ஸ்கோரைப் பெற்று ஆட்டமிழந்ததால், அவர் பேட்டிங்கில் மிகவும் கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் ஒற்றை ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார். பின்னர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ரன் அவுட் ஆனார்.
கெய்க்வாட்டின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர் சீசனின் தொடக்கத்தில் சிரமப்படுவது இது முதல் முறை அல்ல. உண்மையில், ஐபிஎல் 2020 மற்றும் ஐபிஎல் 2021 இல் கூட, ருதுராஜ் கெய்க்வாட் அந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்க ஸ்கோரைப் பதிவு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு கடந்த சீசனில் வெளிப்படுத்திய ஃபார்முக்கு மீண்டு(ம்) வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Ruturaj Gaikwad in the first three matches of each of his three IPL seasons
— Rohit Sankar (@imRohit_SN) April 3, 2022
2020: 0, 5, 0
2021: 5, 5, 10
2022: 0, 1, 1
He's come storming back in the first two seasons. He'll come storming back here 💪#IPL2022 #CSKvPBKS
இந்த நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது நம்பிக்கை வையுங்கள் என்று ரசிகர்களுக்கு ருதுராஜ் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். கடந்த முறை சாம்பியன் அணியான தங்களின் மீது முழு நம்பிக்கை வைத்து ஆதரவளியுங்கள் என்றும், இந்த முறை தாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என உறுதி அளிப்பதாகவும், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற 100 சதவீதம் பங்களிப்பை கொடுப்போம் எனவும் ருதுராஜ் உருக்கமாக கூறினார்.
முன்னதாக, ருதுராஜூக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கொடுப்போம் என்றும், அவர் தங்கள் அணியின் முக்கியமான வீரர் எனவும், பழைய நிலைமைக்கு திரும்புவார் எனவும் அணியின் கேப்டன் ஜடேஜா கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்