வந்துவிட்டது ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி… 2008 முதல் இறுதிப்போட்டியில் வென்ற அணிகள் எது? எப்படி அமைந்தது?
இந்த ஆண்டு இப்படி இருக்க ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை நடைபெற்றுள்ள இருதிப்போட்டிகள் முடிவை எவ்வாறு கண்டுள்ளன என்பது மிகவும் சுவாரசியமான விஷயம் ஆகும்.
ஐபிஎல் 2023 இன் வெற்றியாளரை அறிய இன்னும் ஒரே ஒரு போட்டிதான் மிச்சம் உள்ளது. குஜராத்தை முதன் முறையாக வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் குஜராத் மீண்டும் வென்று இறுதிப்போட்டிக்கும் சென்னையை சந்திக்க வந்துள்ளது. 10 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில் தற்போது 2 அணிகள் மட்டுமே மிச்சம் உள்ளன. இதில் வெல்லும் அணி பெருமைமிகு கோப்பையை தட்டி செல்லும் என்பதால் ரசிகர்கள் உற்சாகததுடன் காத்திருக்கின்றனர். அதுவும் இதில் மிகவும் வலுவான அணியாக உருவாகியுள்ள குஜராத் அணியை சென்னை எதிர்கொள்வதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டி
இம்முறை வென்றால் சென்னை அணிக்கு இது 5வது கோப்பையாக மாறும். இதன் மூலம் அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த முறை சாம்பியன் ஆன குஜராத் அணி மீண்டும் வென்றால் அந்த அணிக்கு அது இரண்டாவது கோப்பையாக அமையும். அதோடு அந்த அணி உள்ளே வந்ததில் இருந்து, வேறு எந்த அணிக்கும் கோப்பை செல்லாமல் இருக்கும் இரண்டாவது ஆண்டாக இது தொடரும். இந்த ஆண்டு இப்படி இருக்க ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை நடைபெற்றுள்ள இருதிப்போட்டிகள் முடிவை எவ்வாறு கண்டுள்ளன என்பது மிகவும் சுவாரசியமான விஷயம் ஆகும்.
2008
முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் என்பது நமக்கு தெரியும். நீல நிற ஜெர்சி அணிந்த அந்த அணியை அப்போது தலைமை தாங்கியவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே. அப்போதும் இறுதிப்போட்டியில் சென்னை தான் இருந்தது. 3 விக்கெட் வித்தியாசத்தில் அவர்கள் வென்றனர்.
2009
இப்போது இல்லாத அணியான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அப்போது கோப்பையை வென்றது. அதில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சோகம்தான்.
2010
முதன்முறையாக சென்னை அணி கோப்பையை வென்ற ஆண்டு அது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2011
தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது சென்னை அணி. இம்முறை எதிரணியாக ஆர்சிபி இருந்தது குறிபபிடத்தக்கது. ஆனால் இந்த வெற்றி சென்னை அணிக்கு 58 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியாக அமைந்தது.
2012
முதன்முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற அந்த ஆண்டும், சென்னை அணி இறுதிப்போட்டியில் இருந்தது. கடைசி ஓவர் த்ரில்லராக அமைந்த இந்த போட்டியில் கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 191 என்ற இலக்கை துரத்தி பிடித்தது.
2013
மும்பை அணி தனது வெற்றிக்கணக்கை துவங்கிய ஆண்டு இது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வந்த இந்த வெற்றி அவர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான வெற்றி ஆகும். 149 என்ற குறைந்த இலக்கை எட்டமுடியாமல் 125 ரன்கள் மட்டுமே எடுத்து கோப்பையை தவறவிட்டது சென்னை.
2014
கொல்கத்தா அணி இரண்டாம் முறை கோப்பையை வென்ற ஆண்டான இதில் முதன் முறையாக பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 199 ரன்களை குவித்தும், அதனை 19.3 ஓவரில் சேஸ் செய்தது கேகேஆர்.
2015
இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி, இம்முறையும் சென்னையை எதிர்த்துதான் இறுதிப்போட்டியை சந்தித்தது. இம்முறை 202 என்ற இமாலய ரன்னை குவித்து 41 ரன்கள் வித்தியாச்தில் வென்றது.
2016
ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது கோப்பையாக இருந்தாலும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இது முதல் கொப்பைதான். அசுர ஃபார்மில் இருந்த கோலி ஆர்சிபி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றதுடன் 970 ரங்களையும் குவித்து, 4 சதங்கள் விளாசி இருந்தார். ஆனாலும் இறுதிப்போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
2017
சென்னை அணி இல்லாத இரண்டாவது ஆண்டான இதில் மும்பை அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் இப்போதும் தோனி தான் எதிரணி. ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் என்ற பெயரில் இருந்த அணியை த்ரில்லிங்கான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
2018
2010, 2011 க்கு பிறகு பல முறை இறுதிப்போட்டிக்கு வந்தாலும், கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது, இரண்டு வருடம் தடை செய்யபட்டு, மீண்டு வந்த சென்னை அணி அந்த வருடமே கோப்பையை தட்டி சென்றது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
2019
மீண்டுமொருமுறை சென்னை அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை படு த்ரில்லிங்கான போட்டியாக அமைந்த அதில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது சென்னை அணி. கடைசி பந்தை மலிங்கா யார்க்கர் வீச அதை எதுவுமே செய்ய முடியாத ஷர்தூல் போல்டானார்.
2020
சென்னை அணிக்கு பிறகு கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை வென்ற அணியாக உருவெடுத்தது மும்பை இம்முறை. ஆனால் முதன்முறையாக தோனி இல்லாத இறுதிப்போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடி எளிதான வெற்றியை பெற்றது மும்பை.
2021
நான்காவது முறையாக கோப்பையை வசமாக்கித் தந்தார் தோனி. இம்முறை கொல்கத்தா அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அந்த அணி.
2022
எட்டு அணிகளில் இருந்து 10 அணிகளாக உருவெடுத்த முதல் ஐபிஎல் தொடரில், புதிதாக அறிமுகம் ஆன இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றை அடைந்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் அணி எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
2023
???
இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!