SRH vs MI: காஷ்மீர் கொடூர தாக்குதல் துக்கம்; ஐபிஎல் போட்டியில் இன்று கொண்டாட்டம் ரத்து
Pahalgam Terror Attack: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pahalgam Terror Attack: காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் நேற்று சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக இந்திய மக்கள் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் நடத்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்தார்.
இந்தியா முழுவதும் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 26 பேரின் உயிரை காவு வாங்கிய இந்த விவகாரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்கள் ரத்து:
இதன்படி, இரு அணிகளின் சார்பிலும் நடத்தப்படும் சியர்கேர்ள்ஸ் நடனங்கள், போட்டி முடிந்த பிறகு நடத்தப்படும் வாண வேடிக்கை, டிஜே நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீரர்கள் மெளன அஞ்சலி செலுத்துவதுடன் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர தேடுதல் வேட்டை:
இந்தியாவின் மிக அழகான சுற்றுலா தளங்களில் ஒன்றாக காஷ்மீர் உள்ளது. ஆனால், தீவிரவாத நடமாட்டம், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் அங்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலே செல்கின்றனர். இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் அங்குள்ள பஹல்காம் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பாவின் ரெசிஸ்டன்ஸ் ஃபரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு அங்கு பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை துப்பாக்கிகள் ஏந்தி தேடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

