RR vs SRH, IPL 2023: மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா ராஜஸ்தான்?.. ஐதராபாத்தின் பிளேயிங் லெவன் இதோ
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டாஸ் வென்ற ராஜஸ்தான்:
ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஜெய்பூரில் உள்ள சவாய் மன்சிங் இந்தூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. அதேநேரம், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். இந்நிலையில் இரு அணிகள் சார்பில் இந்த போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்&விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஜோ ரூட்,ஹெட்மேயர், முருகன் அஷ்வின், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் சந்தீப் சர்மா.
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
படிக்கல், ரியான் பராக், ஹோல்டர், மெக்காய், ஆடம் ஜாம்பா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன், விவ்ரந்த் சர்மா, மார்கண்டே புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன்.
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
ஹாரி ப்ரூக், அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் தாகர், நிதிஷ் குமார், சன்விர் சிங்
நேருக்கு நேர்
இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 9 முறையும், ஹைதராபாத் அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெறும் ஒன்றில் மட்டுமே ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியல் விவரம்:
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பத்து போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வியுற்ற நிலையில், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நடப்பு சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்ற ஐதராபாத் அணி, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.