மேலும் அறிய

Rishabh Pant: மீண்டும் டெல்லி அணிக்கு கேப்டனாகவே வரும் ரிஷப் பண்ட்.. டெல்லி கேபிடல்ஸ் கொடுத்த அப்டேட் இதுதான்!

ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏறக்குறைய ஒரு வருடமாக கிரிக்கெட் களத்தில் இருந்து ஒதுங்கியிருந்த பண்ட், விரைவில் களம்காண இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

2024 ஜனவரியில் நடைபெறவுள்ள இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இருந்து ரிஷப் பந்த் மீண்டும் களமிறங்கலாம். அப்படி இல்லையெனில், ஐபிஎல் 2024 மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் வலம் வரலாம். கடந்த ஆண்டு கார் விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட், இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த சூழலில், ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் திரும்புவார் என்றும், டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்உம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் கார் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கியது. இதில், பண்ட்க்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டநிலையில், அவருக்கு முழங்காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் அவர், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

இந்தநிலையில் கிரிக்பஸ்ஸின் அறிக்கையின்படி, ஐபிஎல் 2024 மூலம் ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்றும், டெல்லி அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

உடற்தகுதி பெற்றுவிட்டாரா ரிஷப் பண்ட்..?

தேசிய கிரிக்கெட் அகாடமி நிபுணர்களின் ஒப்புதலை பொறுத்து ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியும். ஆனால், பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பண்ட் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என்று கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அனுமதி பெற்ற பின்னரே விக்கெட் கீப்பிங் பணியை ரிஷப் பண்ட் செய்ய முடியும். விக்கெட் கீப்பிங்கிற்கு அவர் முழுமையாக தகுதி பெறவில்லை என்றால், பண்ட் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த முடியும். 

5 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோ:

View this post on Instagram
 
A post shared by Rishabh Pant (@rishabpant)

ரிஷப் பண்ட் ஜிம்மில் வெயிட் லிப்டிங் செய்து வெளியிட்ட வீடியோவின் மூலம் காயத்திலிருந்து மிக வேகமாக குணமடைந்து வருகிறார் என்பது தெரிகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஜிம்மில் பயிற்சியின் போது வீடியோவை ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் பளு தூக்குவதுடன் சைக்கிள் ஓட்டுவதையும் காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget