மேலும் அறிய

RCB vs KKR Playing XI: இவங்க போதும்... கொல்கத்தாவுக்கு எதிராக விராட் கோலியின் ப்ளேயிங் லெவன் இதுதான்..!

RCB vs KKR Playing XI: கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே விளையாடி வரும் இந்த இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 17 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி நான்கு போட்டிகளில் மூன்றில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 10 போட்டிகளில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், சின்னசாமி மைதானத்தில் இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி நிலவரம்:

நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கேப்டன் டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தலான ஃபார்மில் உள்ளனர். ஆனால், அவர்களை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்காதது பெங்களூருவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதேபோன்று பந்துவீச்சிலும் முகமது சிராஜ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வர, ஹர்ஷல் படேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். 

கொல்கத்தா அணி நிலவரம்:

கொல்கத்தா அணி இதுவரை நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. கேப்டன் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட எந்தவொரு பேட்ஸ்மேனும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும், நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதும் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்:

என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 

மன்தீப் சிங், லிட்டன் தாஸ், அனுகுல் ராய், சுயாஷ் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்:

விராட் கோலி (கேப்டன்), ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார் வைஷாக், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இம்பேக்ட் ப்ளேயர்கள்:

ஃபாஃப் டு பிளெசிஸ், ஆகாஷ் தீப், கர்ன் ஷர்மா, ஃபின் ஆலன், அனுஜ் ராவத் 

தலைப்பு செய்திகள்

DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Embed widget