Rajat Patidar Health: சிறிது காலமாக தன்னை தொந்தரவு செய்த காயம்.. மீண்டு விட்டதாக போஸ்ட் போட்ட ரஜத் படிதார்!
குதிகால் காயம் காரணமாக படிதார் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2023 சீசனில் இருந்து முழுமையாக விலகினார்.
![Rajat Patidar Health: சிறிது காலமாக தன்னை தொந்தரவு செய்த காயம்.. மீண்டு விட்டதாக போஸ்ட் போட்ட ரஜத் படிதார்! Rajat Patidar Shares Health Update After Undergoing Surgery Virat Kohli Reacts Rajat Patidar Health: சிறிது காலமாக தன்னை தொந்தரவு செய்த காயம்.. மீண்டு விட்டதாக போஸ்ட் போட்ட ரஜத் படிதார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/be0311ca3a8b70324782c3ab84c137991683099415243109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஜத் படிதாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. விரையில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிதார் அறுவை சிகிச்சைக்கு பிறகு தன்னை பற்றிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என விராட் கோலியும் வாழ்த்தியுள்ளார்.
குதிகால் காயம் காரணமாக படிதார் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2023 சீசனில் இருந்து முழுமையாக விலகினார். அவர் இல்லாததால், ஆர்சிபி அணி இன்றளவும் மாற்று வீரரின்றி தடுமாறி வருகிறது.
இதுகுறித்து படிதார் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சிறிது காலமாக தன்னை தொந்தரவு செய்த ஒரு பிரச்சனையில் இருந்து தற்போது விடுபட்டதாக தெரிவித்தார். அதில், “என்னை ஆதரித்த அனைவருக்கும் விரைவில் இரு அப்டேட்டை வழங்க விரும்புகிறேன். நான் சமீபத்தில் ஒரு காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்தேன். அந்த காயமானது நீண்ட காலமாக என்னை தொந்தரவு செய்தது. தற்போது அதிலிருந்து மீண்டு விட்டேன்.
View this post on Instagram
நான் மீண்டும் பாதையில் நடக்க இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மீண்டும் களத்தில் இறங்கி நான் விரும்பியதை செய்ய காத்திருக்கிறேம். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி.. “ என பதிவிட்டு இருந்தார்.
ரஜத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த பெங்களூர் நிர்வாகம், “ரஜத்தின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த சீசனில் அவர் திரும்புவதற்காக காத்திருக்கிறோம். நிறைய அன்பும் வாழ்த்துகளும்." என குறிப்பிட்டுள்ளார்.
ரஜத் படிதார் :
ரஜத் படிதார் இதுவரை ஐபிஎல்லில் 12 போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் எடுத்துள்ளார். இந்த போட்டியில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடித்துள்ளார். ரஜத்தின் சிறந்த ஐபிஎல் ஸ்கோர் 112 நாட் அவுட்.
இந்த தொடரில் ஆர்சிபி எப்படி?
ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி, ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அவர்களின் நிகர ரன் ரேட் -0.030 ஐ கொண்டுள்ளனர்.
ஃபாப் டு பிளேசிஸ் இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 466 ரன்கள் எடுத்துள்ளது. 5 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். இன்றளவு அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)