Samson Jaishwal: வாவ்.. என்ன ஒரு கேப்டன்சி..! ஜெய்ஸ்வாலுக்காக சஞ்சு சாம்சன் செய்த காரியம்..!
அந்த பந்தை நன்றாக வைடில் சுயாஷ் ஷர்மா வீச, அதனை சிரமப்பட்டு பின்னால் சென்று ஸ்ட்ரோக் வைத்தார் சாம்சன். அவர் விட்டிருந்தால் கீப்பர் பிடிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் பந்து பவுண்டரி சென்றிருக்கும்.
![Samson Jaishwal: வாவ்.. என்ன ஒரு கேப்டன்சி..! ஜெய்ஸ்வாலுக்காக சஞ்சு சாம்சன் செய்த காரியம்..! Rajasthan captain beautiful gesture to get Jaiswal to score a century Sanju Samson impressed everyone Samson Jaishwal: வாவ்.. என்ன ஒரு கேப்டன்சி..! ஜெய்ஸ்வாலுக்காக சஞ்சு சாம்சன் செய்த காரியம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/93d992b68dcced5d815c6c5ef6a489211683871482824109_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆட்டம் முழுவதும் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 94 ரன்களில் இருக்கும்போது அணியின் வெற்றிக்கு 3 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் செஞ்சுரி அடிப்பதற்காகவும், வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை பெற்றுத்தருவதற்காகவும் செய்த செயல் அனைவரையும் நெகிழச் செய்தது.
ராஜஸ்தான் vs கொல்கத்தா
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேஸிங்கின் இரண்டாவது ஓவரில் பட்லர் டக் அவுட் ஆனாலும், வெகு இலகுவாக அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து சென்றார் ஜெய்ஸ்வால். அதோடு ஐ.பி.எல்.லின் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சாதனைகளை தன்வசப்படுதியுள்ளார்.
Sanju Samson the captain. Nothing else. #sanju #dhoni #jaiswal #kohli #msd #rrvskkr pic.twitter.com/6fCgNisTFk
— athulvm (@athulvm9) May 11, 2023
புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
ஜெய்ஸ்வாலின் அதிரடியால் இந்த போட்டியை எளிதாக வென்ற ராஜஸ்தான் அணிக்கு இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் பெறும் ஏற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக எல்லா அணிகளும் ரேஸில் இருக்கும் நேரத்தில் ரன் ரேட்டை வெகுவாக உயர்த்தி அணியை மேலும் உறுதியாக மாற்றியுள்ளது. 150 ரன்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா அணி ஜெய்ஸ்வால் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இறுதியாக ஜெய்ஸ்வால் வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை பெற்றுத்தருவதற்காக வைடுக்கு சென்ற 12வது ஓவரின் கடைசி பந்தை ஸ்ட்ரோக் வைத்து ஜெய்ஸ்வாலுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.
பட்லர் செய்த தியாகம்
இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலுக்காக ராஜஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் இருவரும் சில தியாகங்கள் செய்தனர். ரன் அவுட் ஆகி, பட்லர் விக்கெட்டையே தியாகம் செய்தார். பட்லர் வரவேண்டாம் என்று சொல்லியும் பாதி தூரம் ஓடி வந்துவிட்ட ஜெய்ஸ்வாலுக்காக ஓடிய பட்லரை நேராக ஸ்டம்பில் அடித்து ஆட்டமிழக்க செய்தார் ரசல். நன்றாக ஆடிய ஜெய்ஸ்வாலுக்காக தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் பட்லர்.
— Billu Pinki (@BilluPinkiSabu) May 12, 2023
சாம்சனின் வியக்க வைக்கும் மனது
ஆட்டம் முழுவதும் நம்பத்தகாத வகையில் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 94 ரன்களில் இருக்கும்போது அணியின் வெற்றிக்கு 3 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் 13வது ஒவரின் கடைசி பந்தை சந்தித்தார். ஆட்டம் முழுவதையும் இவ்வளவு எளிதாக முடிக்க காரணமானவர் செஞ்சுரி அடிப்பதற்காகவும், வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை பெற்றுத்தருவதற்காகவும் அந்த பந்தை டாட் பாலாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்த சாம்சனுக்கு ஒரு டிவிஸ்ட் காத்திருந்தது. அந்த பந்தை நன்றாக வைடில் சுயாஷ் ஷர்மா வீச, அதனை சிரமப்பட்டு பின்னால் சென்று ஸ்ட்ரோக் வைத்தார் சாம்சன். அவர் விட்டிருந்தால் கீப்பர் பிடிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் பந்து பவுண்டரி சென்றிருக்கும். ஆனால் ஜெய்ஸவாலுக்காக அதனை செய்தார் சாம்சன். செய்துவிட்டு கையை 'தூக்கி காண்பித்து', செலிபரேட் செய்ய வேண்டாமா என்பது போல சைகை செய்தது பலர் மனதையும் வென்றது. 48 ரன்களில் இருந்த அவர் தனது அரைசதத்தையும் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே இன்றுவரை சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்திருப்பதற்கான காரணத்தை அந்த இடத்தில் மறுபதிவு செய்தார். இறுதியாக ஜெய்ஸ்வால் வின்னிங் ஷாட் அடிக்க அது பன்வுண்டரி மட்டுமே சென்றது, இருந்தாலும் கையை உயர்த்தி காட்ட ராஜஸ்தான் அணியின் வெற்றி எல்லோரும் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் அதிவேக அரைசதம் அடித்தபோது கொல்கத்தா அணி ரசிகர்கள் கூட எழுந்து நின்று கைதட்டியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)